உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • June 10, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 65.36 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.04 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.61 அமெரிக்க டொலராக சற்று வீழ்ச்சியைப் பதிவு […]

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – நிக்கோலஸ் பூரனின் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி

  • June 10, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார். 29 வயதில் தனது ஒய்வை அறிவித்து பலருக்கும் அவர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். “ஆழமாக யோசித்த பிறகே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எனது முடிவை அறிவிக்கிறேன்” என சமூக வலைதள பதிவு மூலம் பூரன் தனது ஓய்வை அறிவித்துள்ளார். திங்கள்கிழமை அன்று இந்த அறிவிப்பு வெளியானது. ஓய்வு குறித்த முடிவை தங்களிடம் பூரன் தெரிவித்துள்ளதாக […]

ஆஸ்திரேலியா

குளிர்காலம் நெருங்கி வருவதால் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • June 10, 2025
  • 0 Comments

குளிர்காலம் நெருங்கி வருவதால் ஆஸ்திரேலியர்கள் காய்ச்சல், COVID-19 மற்றும் RSV க்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தேசிய காய்ச்சல் தடுப்பூசி விகிதங்கள் ஏற்கனவே குறைந்துவிட்டன என்று அவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசி விகிதம் வெறும் 24.24% மட்டுமே, மேலும் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி விகிதம் வெறும் 14% மட்டுமே. COVID-19 பூஸ்டர் தடுப்பூசி உட்கொள்ளலும் குறைந்துள்ளது, கடந்த ஆண்டில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி விகிதங்கள் 38% இலிருந்து […]

வாழ்வியல்

ஆரோக்கியமான அமர்தலுக்கான முக்கிய குறிப்புகள்!

  • June 10, 2025
  • 0 Comments

1. நாற்காலியைத் தேர்ந்தெடுங்கள்! ஒவ்வொருவரும் எடையிலும் உருவத்திலும் மாறுபட்டு இருப்பதால் ஒரே மாதிரியான நாற்காலி எல்லோருக்கும் பொருந்தாது. அதனால் உயரத்தை ‘அட்ஜஸ்ட்’ செய்யக்கூடிய, பின்பக்கம் சாயும் பகுதி 90-120 டிகிரி வளையக்கூடிய நாற்காலிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. இதை எர்கோனாமிக்ஸ் நாற்காலிகள் என்பார்கள். இதில், கால்கள் இரண்டும் தரையில்படும்படியாக நாற்காலியை சரிசெய்து உட்கார வேண்டும். தலையையும் கழுத்தையும் சாய்த்து வைக்கும் வகையிலான அமைப்பு நாற்காலியில் இருக்க வேண்டும். நகராத நாற்காலிகளைவிடவும் சர்க்கரமுள்ள இடமும் வலமும் திரும்பும் வசதியுள்ள நாற்காலிகள் […]

வட அமெரிக்கா

குடியேற்ற எதிர்ப்புகள் காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் தற்போது கடுமையான அமைதியின்மை 

  • June 10, 2025
  • 0 Comments

குடியேற்ற எதிர்ப்புகள் காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் தற்போது கடுமையான அமைதியின்மை நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, அமெரிக்க இராணுவம் 700 கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் லொஸ் ஏஞ்சல்ஸுக்கு 2,000 கூடுதல் பாதுகாப்புப் படைகளை அனுப்ப உத்தரவை பிறப்பித்தார். லொஸ் ஏஞ்சல்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படைகளை அனுப்ப டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளை அனுப்பும் முடிவு ஒரு […]

விளையாட்டு

ICC Hall of fameஇல் தோனி – இந்தப் பட்டியலில் இணைந்த 11-வது இந்தியர்!

  • June 10, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டார். லண்டனில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெற்ற நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியானது. தற்போது 5 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 கிரிக்கெட் வீராங்கனைகள் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தப் பட்டியலில் 115 பேர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 11-வது இந்தியர் ஆகியுள்ளார் தோனி. கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச […]

இலங்கை செய்தி

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள ரணில்

  • June 10, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த விசாரணை நடத்தப்படுகிறது. அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அமைச்சரவையில் பணியாற்றிய பல முன்னாள் அமைச்சர்களிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே வாக்குமூலங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஒன்லைன் ஷாப்பிங்கில் AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் முறை.!

  • June 10, 2025
  • 0 Comments

கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும், கூகிள் இப்போது தேடலில் AI பயன்முறையைச் சேர்த்துள்ளது. கூகிள் ‘AI Mode’ என்பது Google-இன் Gemini மாதிரிகளால் (Gemini models) இயக்கப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தேடல் அனுபவமாகும். இது தேடல் முடிவுகளைத் தாண்டி, பயனர்களின் கேள்விகளுக்கு உரையாடல் வடிவில் பதிலளிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை எளிதாகக் கண்டறியலாம், ஒப்பீடு செய்யலாம். […]

இலங்கை

இலங்கையில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்

  • June 10, 2025
  • 0 Comments

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் முன்னறிவிப்புகளைப் பொதுமக்கள் கவனத்திற் கொள்ள வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தப்படவிருந்த 7 பேர் கொண்ட குடும்பம் தப்பியோட்டம்

  • June 10, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் இருந்து நாடு கடத்துவதற்கு தீர்மானித்திருந்த 7 பேர் கொண்ட சிரிய குடும்பமொன்று தற்போது தலைமறைவாகியுள்ளது. பல்கேரியாவில் புகலிடம் பெற்று அங்கு வசித்து வந்திருந்த குறித்த குடும்பத்தினர், சாக்சனி-அன்ஹால்ட்டின் நாம்பர்க் நகருக்கு இடம்பெயர்ந்தனர். இந்நிலையில், பிராங்பேர்ட் விமான நிலையத்தின் ஊடாக அவர்களை நாடுகடத்த முயற்சி செய்த போது அவர்கள் தலைமறைவாகினர். குறித்த குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பாடசாலையில் இருக்கும் போது அதிகாரிகள் அவளை அழைத்து சென்றதாக முதலில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும், உள்துறை […]

Skip to content