இலங்கை

கொழும்பிற்கு வரும் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகள்

  • April 10, 2023
  • 0 Comments

கொழும்பிற்கு சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகள் கொண்டுவரப்படவுள்ளது. முன்னோடித் திட்டமாக சூரிய சக்தியில் இயங்கக்கூடிய பேருந்துகளை இயக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சு இது தொடர்பான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளது. இதன்படி கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக வைத்து குறித்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. பொது – தனியார் கூட்டுத் திட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.  

இலங்கை

இலங்கையில் மற்றுமொரு கட்டணம் உயர்வு!

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாகும். மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை 15,000 ரூபாவினால் 10,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் ஆண், பெண் மக்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருகிறது – மருத்துவ நிபுணர்

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் 15% பெண்களும் 6.3% ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆலோசகர் சமூக மருத்துவர் சாந்தி குணவர்தன, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தி மாநாட்டில், பெண் மக்களிடையே உடல் பருமன் மற்றும் அதிக எடை 2021 இல் 43% ஆக அதிகரித்துள்ளதாகவும், 2015 இல் இது 34% ஆக […]

இலங்கை

சகல கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் அவசரமாக அழைத்துள்ள மஹிந்த

  • April 10, 2023
  • 0 Comments

சகல கட்சிகளின் தலைவர்களுடன் இன்று (01) பிற்பகல் 1.30 மணிக்கு விசேட கூட்டம் நடத்தப்படவுள்ளது. சபாநாயர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த அவசரக்கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் அதில் பங்கேற்குமாறு கட்சிகளின் செயலாளர்களுக்கு பாராளுமன்றம் செயலாளர் அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் அடுத்த வாரத்தில் இடம்பெறவிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எடுக்கவேண்டிய செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும்.

இலங்கை செய்தி

உடனடியாக தேர்தலை நடத்துங்கள்; இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

  • April 10, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நியாயமான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகளிற்கான குழு இலங்கை அரசாங்கத்திடம் இதனை தெரிவித்துள்ளது. ட்விட்டர் செய்தியொன்றில் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இதனை கூறியுள்ளது. இலங்கை மக்களின் குரல்கள் ஒலிக்காமலிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும், இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயல் என்றும் அமெரிக்க செனெட் குழு தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

யாழில் பார்ப்போரை கவர்ந்துள்ள பேருந்து உணவகம்!

  • April 10, 2023
  • 0 Comments

லண்டனில் வசிக்கும் தொழிலதிபர் வியாபாரத்தின் ஒருபகுதியை தனது தாய்நாட்டிலும் கட்டியெழுப்பும் நோக்கில் யாழ்.சண்டிலிப்பாயில் ஓர் உணவகத்தைத் திறந்தார். அவருக்கு இங்கே 10 வரையான உணவகங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த  உணவகம் வழக்கமான உணவகம் போல் இல்லாது ஒரு சிவப்பு நிற பேருந்தை அமைத்து, அதையே உணவகம் ஆக்கியிருக்கிறார். இந்நிலையில் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் இந்தப் பேருந்து உணவகம் மெல்லமெல்ல பிரபலமாகி, இன்று அதிகளவு வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது. தனியே பேருந்தை மட்டும் பார்ப்பதற்காக யாரும் உணவகத்துக்கு வரமாட்டார்கள் இல்லையா..? எனவே […]

இலங்கை

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

  • April 10, 2023
  • 0 Comments

இலங்கையில் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என ட்விட்டர் செய்தியூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்களின் உரிமை மீறப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யுவதி – சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • April 10, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவியப் பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் நேற்று டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக சுங்க […]

இலங்கை

ஜனாதிபதி ரணிலை கொலை செய்ய சதி? பொலிஸார் வெளியிட்ட தகவல்

  • April 10, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான தகவலினை பொலிஸ் தலைமையகம் மறுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த செய்தியில் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

  • April 8, 2023
  • 0 Comments

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பது  குறித்து கவலை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் தளங்களில் பாலின வன்முறைகளை கையாள்வதற்கு பயனுள்ள மற்றும் திறமையான புகார் பொறிமுறைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், டிஜிட்டலை மையமாக கொண்ட பாலின வன்முறை குறித்து  விழிப்புணபுர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என […]

You cannot copy content of this page

Skip to content