முட்டை வெடித்ததால் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..!
பிரித்தானியாவில் மைக்ரோவேவில் முட்டையை வேகவைத்து எடுத்தபோது வெடித்ததில் பெண்ணின் முகம் ஒருபக்கமாக சிதைந்தது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் போல்டனில் வசிப்பவர் ஷாஃபியா பஷிர். 37 வயதான இவர் இணையத்தில் பிரபலமான நுட்பத்தை பயன்படுத்தி முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். Microwaved Poached Egg என்னும் இந்த முறையில், கண்ணாடி கிண்ணம் அல்லது குவளை ஒன்றில் பாதியளவு சாதாரண நீரை ஒற்றி, அதில் பச்சை முட்டையை ஊற்றி உப்பு சேர்த்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வேகவைத்து […]