இந்தியா

மணமகளுக்காக 13 நாட்கள் மண்டபத்திலே காத்திருந்த மணமகன்!

  • May 30, 2023
  • 0 Comments

ராஜஸ்தானில் திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மணமகள் காதலனுடன் ஒடிவிட்ட நிலையில், 13 நாட்கள் மணமகன் மண்டபத்தில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் […]

ஐரோப்பா

கொசோவோவில் நேட்டோ வீரர்களுக்கும், செர்பிய இனத்தவருக்கும் இடையில் மோதல்!

  • May 30, 2023
  • 0 Comments

கொசோவோவில் நேட்டோ தலைமையிலான அமைதி காக்கும் படைக்கும், செர்பியர் இனத்தவருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 30 தஇற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். வடக்கு கொசோவோவில் உள்ள நகராட்சிகளில் ஒன்றின் அலுவலகங்களைக் கைப்பற்ற செர்பியர்கள் முயன்றுவருகின்றனர்.  அங்கு அல்பேனிய இன மேயர்கள் கடந்த வாரம் தங்கள் பதவிகளை ஏற்றனர். இதனையடுத்து மோதல் வெடித்தது. இந்த மோதலில், 11 இத்தாலிய வீரர்கள், 19 ஹங்கேரிய வீரர்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பிரிஸ்டினாவிற்கு வடக்கே 45 […]

வட அமெரிக்கா

12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

  • May 30, 2023
  • 0 Comments

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில் காணாமல் போயிருந்தார்.20 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிறந்த நாள் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மெடிசனை இறுதியாக பார்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரணம் தொடர்பில் […]

இலங்கை

16 வயது சிறுமியின் அரைநிர்வாணப் புகைப்படங்களுடன் பெண் ஒருவர் கைது!

  • May 30, 2023
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒருவர் உலகளாவிய ரீதியில் இயங்கும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றின் அங்கத்தவர் என்பதுடன் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் தேசிய ஊடகப் பணிப்பாளரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமியின் அரை நிர்வாண புகைப்படங்கள் […]

இந்தியா

பிரபல நடிகை அகன்ஷா துபேயின் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

  • May 30, 2023
  • 0 Comments

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரை சேர்ந்த நடிகை அகன்ஷா துபே சில மாதங்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுவயது முதலே நடனம், நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அகன்ஷா துபே, டிக்டாக்கில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தார்.இன்ஸ்டாகிராமிலும் பிரபலமான அகன்ஷா துபேவுக்கு மில்லியன்கணக்கான பாலோவர்கள் இருக்கின்றனர்.தொடர்ந்து மொடலாக வலம்வந்த அகன்ஷா துபே, 17 வயதில் சினிமாவில் அறிமுகமானார். சில படங்களில் நடித்து வந்த அகன்ஷா துபே, வாரணாசியில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த போது கடந்த மார்ச் மாதம் 26ம் […]

ஐரோப்பா

அமெரிக்காவில் தேசிய நினைவு நாள் நிகழ்வில் துப்பாக்கிச் சூடு – 16 பேர் பலி!

  • May 30, 2023
  • 0 Comments

அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர். இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. பலர் காயமடைந்துள்ள நிலையில், […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இறந்து 4 ஆண்டுகளாகியும் கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரி உடல்!

  • May 30, 2023
  • 0 Comments

இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் கன்னியாஸ்திரி உடல் கெடாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் ஒரு தேவாலயத்தில் சேவையாற்றி வந்த சிஸ்டர் வில்ஹெல்மினா லான்காஸ்டர்.இவர் தனது 95 வயதில் இறந்தார். அவரை ஒரு மர சவப்பெட்டிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கின்றனர். இந்நிலையில், தேவாலய வழக்கப்படி அவரது உடலை தேவாலயத்துக்குள் புதைக்க தோண்டி எடுத்துள்ளனர்.அப்போது சவப்பெட்டியில் விழுந்த சிறு துளையால் இறந்த கன்னியாஸ்திரியின் கால் பகுதி தெரிந்திருக்கிறது. அதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால் பகுதி […]

பொழுதுபோக்கு

ஐயோ சாமி போதும்….. ஓட்டமெடுத்த அரச குடும்பத்தினர்! காரணம் தெரியுமா?

  • May 30, 2023
  • 0 Comments

இயக்குனர் மணிரத்தினத்தின் படங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் எப்போதுமே அழகாக காண்பித்து இருப்பார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என்போரை அரச அரசிகளாக கண்முன் காட்டி இரண்டு பாகங்களாக உருவாகி இருந்தது. இப்படமும் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில் மணிரத்தினத்தின் செல்லப் பிள்ளைகளான பொன்னியின் செல்வன் ஹீரோக்கள் அவருக்கு டாட்டா காண்பித்து சென்றுள்ளனர். பொதுவாக ஒரு ஹீரோக்கள் ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்தில் நடிக்கும் போது இடைவெளி […]

ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சனின் வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலக்கெடு!

  • May 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் வாட்சப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவின்போது,  பொரிஸ் ஜோன்சனும் அவரது ஊழியர்களும் முடக்க நிலை விதிகளை மீறி பெருவிருந்தொன்றை பிரதமர் அலுவலகத்தில் நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விசாரணைகள் அவருடய வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலதாமதமாகியுள்ளது. இதன்படி, வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி (வியாழக்கிழமை) அவர் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் […]

ஆசியா

சீனாவில் ஆயிரக்கணக்கான சமூகவலைத்தளக் கணக்குகள் முடக்கம்!

  • May 30, 2023
  • 0 Comments

சீனாவில் ஒரேநாளில் 66 ஆயிரம் போலி சமூக வளைத்தள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சீனாவில் சமூகவலைத்தளங்கள் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதகாவும், பணமோடி செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில்  கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனை நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளது. இதன்விளைவாக 66 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பிட்டுள்ளது. அத்துடன்  தொழில் செயலியில் சுமார் ஒன்பது லட்சம் கணக்குகள் தவறான கருத்துக்களை பதிவிட்டதற்காக தண்டிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.