செய்தி தமிழ்நாடு

ரயில் தண்டவாளத்தில் நின்ற யானை

  • April 10, 2023
  • 0 Comments

கோவையில் வனத்துறையினருக்கு போக்கு கட்டி வந்த மக்னாயானை ரயில் தண்டவாளத்தில் நின்ற போது வனத்துறையினர் சாதுர்யமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் யானையை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் அட்டகாசம் செய்த யானை கடந்த ஆறாம் தேதி பிடிக்கப்பட்டு கோவை வனச்சரகத்தில் உள்ள வரகளியாறு பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி யானை வனத்தை விட்டு வெளியேறி பொள்ளாச்சி ஆனைமலை, புரவிபாளையம், கிணத்துக்கடவு, வழியாக மதுக்கரை பகுதியை அடைந்தது. கடந்த 21-ம் தேதி காலை யானை […]

செய்தி தமிழ்நாடு

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

  • April 10, 2023
  • 0 Comments

கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  இக்கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்ட பக்தர்களும் வருகை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர். இத்தேரானது ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை அடைகிறது. இத்தேர் திருவிழாவை ஒட்டி இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. கோவை உட்பட பல்வேறு […]

செய்தி தமிழ்நாடு

குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணை

  • April 10, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா காரக்கோட்டை குளத்துள்வாய் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான 7 இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டிய இறால் பண்ணைகள் குடியிருப்பு பகுதிக்குள்ளே அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இறால் பண்ணைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பல்வேறு […]

செய்தி தமிழ்நாடு

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில்

  • April 10, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது குரு ஸ்தலமாக விளங்கும் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட 700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தை சுந்தர பாண்டியன் என்ற பாண்டிய மன்னர் கட்டியதாக வரலாறு இந்த […]

செய்தி தமிழ்நாடு

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திருத்தம் செய்யக் கோரி சாலை மறியல்

  • April 10, 2023
  • 0 Comments

2014ம் ஆண்டு முதல் முயற்சி செய்து பலத்த எதிர்ப்புக்கும் இடையில் 2019ம் ஆண்டு புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும் இதை உடனடியாக திருத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ஊழியர் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியல் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கத்தினர் இணைந்து […]

இலங்கை செய்தி

நண்பன் வீட்டில் தங்க வளையலை திருடி செல்ல நாய்க்கு பிறந்தாள் கொண்டாடிய இளைஞன்!

  • April 10, 2023
  • 0 Comments

நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கிருந்த சுமார் ஐந்தரை இலட்சம் ரூபா பெறுமதியான தங்க வளையலை திருடி, தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் விழா நடத்திய சம்பவம் ஒன்று மொரட்டுமுல்லவில் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய குறித்த சந்தேக நபர், தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருபவர். இந்நிலையில், கடந்த வாரம் வீட்டில் இருந்து தங்க நகை காணாமல் போனதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். வீட்டுக்கு அடிக்கடி செல்லும் நபர் தனது […]

செய்தி

அரசு ஆவணங்கள் அரசுக்கே திருப்பி அனுப்ப முடிவு

  • April 10, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மகன் செல்வம் ஆகியோர் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் வடபுறமாக அம்புலி ஆற்றின் பிரதான வாய்க்காலான அன்னதானக் காவேரி வாய்க்கால் சென்று வருகிறது. கடந்த ஆண்டு இந்த அனுனதானக் காவேரி வாய்க்கால் தூர்வாரப்பட்டு வெள்ள நீர் சென்ற நிலையில் அப்போது முதல் இரண்டு குடும்பத்தினரும் பாதை இன்றி சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக தனது குடும்பத்தினருக்கு உடனடியாக பாதை […]

இலங்கை செய்தி

நாளைய தினம் முதல் விமான டிக்கட்டுகளின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • April 10, 2023
  • 0 Comments

நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என […]

செய்தி

டாய்லெட் பேப்பரில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள்!! ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்

அமெரிக்காவில் விற்கப்படும் டாய்லெட் பேப்பரில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உலகம் முழுவதும் விற்கப்படும் டாய்லெட் பேப்பரில் உள்ள ரசாயனங்கள் மற்றும் புளோரிடாவில் உள்ள எட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவுநீர் கசடு மாதிரிகள் ஆகியவற்றின் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர். PFAS – அல்லது per- மற்றும் polyfluoroalkyl பொருட்கள் – ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கும் செயற்கை இரசாயனங்கள், டெஸ்டிகுலர் மற்றும் சிறுநீரக புற்றுநோய்களுடன் […]

செய்தி தமிழ்நாடு

தமிழை தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் 8 ஆம் நிறைவு நாள் விழா

  • April 10, 2023
  • 0 Comments

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் தமிழைதேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தின் 8ஆம் நாள் நிறைவுநாள் விழா மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் நடைபெற்றது.  இந்த விழாவில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் பங்கேற்று பேசியபோது : தமிழைதேடி மதுரை மாநகருக்கு வந்துள்ளேன், தமிழை தேடி வந்துள்ள நான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வந்தேன் ஆனால் இங்கு தமிழையும, தமிழன்னையையும் காணவில்லை, தமிழை தேடி என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது ஆனால் வேறு […]

You cannot copy content of this page

Skip to content