இலங்கை

கனடாவில் யாழ் யுவதி சுட்டுக்கொலை – மேலும் ஒருவர் காயம்

  • March 11, 2025
  • 0 Comments

கனடாவின் மார்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயர் ஆல்பிரட் டோர் அப்பாவின் பேத்தியான ரகுதாஸ் நிலாக்ஷி என்ற 20 வயதுடைய பெண் ஆவார். துப்பாக்கிச் சூடு நடந்த வீடு கனடாவின் மார்கம் பகுதியில் உள்ள காசில்மோர் அவென்யூவில் அமைந்துள்ளது, மேலும் யாழ்ப்பாணத்தின் கோண்டாவில் பகுதியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த இளம் பெண், இரண்டு […]

செய்தி

பொது மக்களிடம் தலைவணங்கி மன்னிப்பு கோரிய தென் கொரியாவின் விமானப்படைத் தலைவர்

  • March 11, 2025
  • 0 Comments

தவறுதலாக சொந்த நாட்டு மக்கள் மீது தென்கொரியா குண்டு மழை பொழிந்தமைக்கு மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்கா உடனான கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தவறுதலாக தனது சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டுமழை பொழிந்ததற்கு தென் கொரியாவின் விமானப்படைத் தலைவர் தலைவணங்கி மன்னிப்பு கோரினார். வடகொரியா எல்லைக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள போச்சியோன் என்ற இடத்தில் இருநாட்டு படைகளும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கேஎப்-16 ரக போர் விமானங்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட நிலையில் வீடுகள், சர்ச்சுகள் மீது விழுந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்கப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத இழப்பு – பீதியில் முதலீட்டாளர்கள்

  • March 11, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் முதலீட்டாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்கப் பங்குச் சந்தை நான்கு டிரில்லியன் டொலர் இழந்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த மாதம் 19ஆம் திகதி S&P 500 குறியீடாக உச்சத்தைத் தொட்டது. அப்போது முதல் S&P 500 பங்கு விலைகள் 8 சதவீதம் குறைந்துள்ளன. அமெரிக்க நேரப்படி நேற்று S&P 500 பங்கு விலைகள் ஒரே நாளில் ஆக அதிகமாக 2.7 சதவீதம் குறைந்தன. இவ்வாண்டு ஒரே நாளில் பதிவான […]

செய்தி வாழ்வியல்

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத காலை உணவுகள்

  • March 11, 2025
  • 0 Comments

சமீப காலங்களில் பல வாழ்கை முறை நோய்கள் மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரோக்கியமான உணவுகளின் இடத்தை துரித உணவுகளும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் பிடித்துள்ளன. அதேபோல், மக்களின் உடல் செயல்பாடுகளும் குறைந்துள்ளன. இவற்றின் காரணமாக பல வித வாழ்க்கை முறை நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். மக்களை அதிக அளவில் பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கிய இடத்தில் உள்ளது. […]

இலங்கை

சாதாரண தரப் பரீட்சை – இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

  • March 11, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுதராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய சகல கற்பித்தல் செயற்பாடுகளும் தடைசெய்யப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பரீட்சைக்கான பயிற்சிகளை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட சட்டங்கள் மீறப்பட்டால், காவல்துறைக்கும் தமக்கும் அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

எலோன் மஸ்க்கின் ‘X’ சமூக ஊடக வலையமைப்பின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல்

  • March 11, 2025
  • 0 Comments

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான எலோன் மஸ்க்கின் ‘X’ சமூக ஊடக தளம், உலகளவில் திடீர் செயலிழப்பை சந்தித்துள்ளது. ‘எக்ஸ்’ சமூக ஊடக தளம் பல சந்தர்ப்பங்களில் செயலிழந்தது. மொத்த செயலிழப்பு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. ‘X’ சமூக ஊடக தளம் செயலிழந்த மிக நீண்ட காலமாக இது கருதப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு ‘X’ சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள […]

ஆசியா செய்தி

சீனாவில் உச்சக்கட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள வேலைவாய்ப்புப் பிரச்சினை

  • March 11, 2025
  • 0 Comments

பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் கணிசமான பகுதியைக் குறைக்கத் தொடங்கியுள்ளதால், சீனாவின் கடுமையான வேலையின்மை பிரச்சினை மோசமடைந்துள்ளது. அந்த நிறுவனங்களில் மெர்சிடிஸ் பென்ஸ், நோக்கியா மற்றும் எச்எஸ்பிசி ஆகியவையும் அடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செயல்பாட்டுத் திறன் மற்றும் சந்தை போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக, 2027 ஆம் ஆண்டுக்குள் சீனாவில் உள்ள தனது ஊழியர்களில் 25 சதவீதத்தினரை பணிநீக்கம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் லாபம் ஆண்டுக்கு […]

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பலத்த மழை!

  • March 11, 2025
  • 0 Comments

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, மொனராகலை […]

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி 2025: சிறந்த அணியை அறிவித்த ICC

  • March 11, 2025
  • 0 Comments

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற  போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி கைப்பற்றியது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் சிறந்த அணியை ஐசிசி  அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில் இந்திய […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை, இந்தியர்கள் – வெளியேற கெடு விதித்த பனாமா

  • March 11, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் பதவியேற்றதும் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறார். சட்ட விரோத குடியேறிகள் 300 க்கும் மேற்பட்டோரை பனாமா,கோஸ்டாரிகா நாடுகளுக்கு அனுப்பி உள்ளனர். இதில் இலங்கையர்கள், இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டினர் அதிகமாக உள்ளனர். இந்நிலையில், பனாமாவில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 65 பேரை பனாமா நகருக்கு நேற்றுமுன்தினம் பேருந்தில் அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் 30 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான்,சீனா,ரஷ்யா உள்ளிட்ட […]