மின்சார சட்டத்தின் இறுதி வரைவு ஜுனில் சமர்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!
புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவு ஆசிரியரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மொழிபெயர்ப்பு மற்றும் சான்றிதழ் நோக்கங்களுக்காக குறித்த வரைவு சட்டம் சமர்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தக் குழு, அபிவிருத்தி முகவர்களால் வழங்கப்பட்ட சட்ட மற்றும் ஆற்றல் ஆலோசகர்களுடன் தொடர்புடைய சீர்திருத்தங்களுக்கு உதவுவதற்காக புதிய சட்டத்தின் இறுதி வரைவு குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. […]