செய்தி தமிழ்நாடு

பைக்கை காதலித்தவருக்கு ஏற்பட்ட பரிதாபம்

  • April 11, 2023
  • 0 Comments

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் பிரபாகரன். தாய் தந்தையை இழந்த இவர் தனி மரமாக வாழ்ந்து வருகின்றார். பியூட்டிஷியன் பியூட்டியசனாக வேலை செய்யும் இவர் மேன்சன் ஒன்றில் தங்கியிருக்கின்றார். பைக் மீது அலாதி பிரியம் கொண்ட பிரபாகரன், விலை உயர்ந்த உயர்ரக பைக் வாங்கும் கனவுடன் கடந்த ஐந்து வருடங்களாக சிறுக சிறுக பணம் சேமித்திருக்கின்றார். இந்த நிலையில் ஒரே தவனையாக 2.17 லட்சம் ரூபாய் பணத்தை தந்து YAMAHA R15 மாடல் பைக்கை வாங்கியிருக்கின்றார். […]

இலங்கை செய்தி

பிள்ளையை அழைத்துக்கொண்டு பாடசாலைக்கு வந்த தாய் மீது கொடூரமாக தாக்குதல்

  • April 11, 2023
  • 0 Comments

பிள்ளையை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்காக பாடசாலைக்கு வந்த தாய் ஒருவரை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெண்ணின் கழுத்து மற்றும் கை ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெவலேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெவலேகம மா ஓயா வத்த பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். காயமடைந்த பெண்ணின் கணவர் சில காலமாக போதைப்பொருள் பாவனைக்கு […]

இலங்கை செய்தி

மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை

  • April 11, 2023
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. அதன்படி, CPC மற்றும் அரசு ஆகிய இரண்டும், தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன, இதன் மூலம் பொதுமக்கள் பீதியடைந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விரைந்து செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இன்று முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவும், நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும், விநியோகம் வழமைபோல் தொடரும் என்றும் உறுதியளித்தார். இலங்கை […]

இலங்கை செய்தி

கொழும்பு விமான நிலையத்தில் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள்

  • April 11, 2023
  • 0 Comments

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் விமான நிலைய ஊழியர்களை பிடிக்க சிவில் உடையில் பாதுகாப்பு குழுவை நியமிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீர்மானித்துள்ளார். சுற்றுலா பயணிகளிடம் இருந்து வரும் புகார்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லக்கேஜ் தூக்குபவர்கள், டாக்சி ஓட்டுனர்கள், தரகர்கள் என பலரால் சுற்றுலா பயணிகள் துன்புறுத்தப்படுவதாக அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர். இதன்படி, […]

இலங்கை செய்தி

சுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் ஒரு இலட்சம் அபராதம்!

  • April 11, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிவில் பாதுகாப்புக் குழுக்களை ஈடுபடுத்துமாறும்இ அத்தகைய முறைகேடுகள் குறித்த முறைப்பாடுகளைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான சாளரத்தை உருவாக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். லக்கேஜ் தூக்குபவர்கள் டெக்சி […]

இலங்கை செய்தி

எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை, இந்தியா திட்டம்!

  • April 11, 2023
  • 0 Comments

எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை, இந்தியா திட்டம்! இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதன்படி, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் உள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தப்படும் சூரிய […]

இலங்கை செய்தி

போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை

  • April 11, 2023
  • 0 Comments

மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது […]

இலங்கை செய்தி

நாவலர் கலாசார மண்டபம் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக் குறித்து யாழில் போராட்டம் !

  • April 11, 2023
  • 0 Comments

நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. ஆளுநர் என்ற எழும்புத் துண்டுக்காக தமிழினத்தை விற்காதே, ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் […]

இலங்கை செய்தி

அரச நிறுவனங்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

  • April 11, 2023
  • 0 Comments

அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். பெரும்பாலானஅமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கிணங்க அனைத்து அமைச்சுக்களின் கீழ் இயங்கும் அரச நிறுவனங்கள் தமது வருடாந்த அறிக்கையை விரைவாக நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள்,மாகாண சபைகள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன […]

இலங்கை செய்தி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்!

  • April 11, 2023
  • 0 Comments

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை விட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மோசமானது என சுட்டிக்காட்டியுள்ள எம்.ஏ.சுமந்திரன்  அதனை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார். இதேநேரம் மாகாண சபை தேர்தலையும் நிதி நிலைமையை காரணம் காட்டி உள்ளூராட்சித் தேர்தலையும் நடத்தாமல் இருப்பது தனி மனித சர்வாதிகார ஆட்சியை காட்டி நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மோசமான சூழலில் இச்சட்டத்தை கொண்டுவந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான […]

You cannot copy content of this page

Skip to content