பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்
தான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தங்களை நோக்கி சுமார் 100 வானூர்திகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்தது.அந்த வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தத் தாங்கள் முயற்சி செய்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது. நடான்ஸில் உள்ள முக்கிய யுரேனியம் செறிவூட்டல் வசதி உட்பட, வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்களும் சாட்சிகளும் தெரிவித்தன. “ஈரான் ஏறத்தாழ 100 ஆளில்லா வானூர்திகளை இஸ்ரேலை நோக்கிப் பாய்ச்சியது. அவற்றைத் தடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்,” என்று […]