பேராதெனிய மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதல்
கண்டி நகரை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீரப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கண்டி நகரை நோக்கிப் பேரணியில் ஈடுபட்ட பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீரப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இயக்குனராக இருந்து நடிகராக மாறிய மிஷ்கின், இரண்டு துறைகளிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்திய ஊடக உரையாடலின் போது, மிஸ்கின் ‘லியோ’வில் தனது கதாபாத்திரம் பற்றி இரகசியத்தை கொட்டினார். மிஷ்கின் கேங்ஸ்டர் ஆக்ஷன் ரோலில் ‘லியோ’வில் ஒரு வில்லனாக நடிக்கிறார் மற்றும் நடிகர் விஜய் மீது கொண்ட பாசத்திற்காக படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார். மிஷ்கின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ‘லியோ’வில் விஜய்யுடன் திரை இடத்தைப் […]
எக்ஸ்பிரஸ்பேர்ள் நியுடயமன்ட் கப்பல்களில் தீவிபத்து ஏற்பட்டவேளை இந்தியா செய்த உதவிக்காக இலங்கை 890 மில்லியன் ரூபாய்களை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், 890மில்லியன் ரூபாயை திருப்பி செலுத்துமாறு இந்தியா உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறினார். இலங்கை கடற்படை விமானப்படை மற்றும் அரசாங்கம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் நியுடயமன்ட் கப்பலில் மூண்ட தீயை கட்டுப்படுத்துவதற்கு இந்திய கடற்படை உதவியது இதன் மூலம் சூழலிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பை கட்டுப்படுத்த […]
அமெரிக்காவில் கண்களில் சொட்டு மருந்து போட்டுக்கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், 14 பேர் பார்வையிழந்துள்ளதுடன், 4 பேருடைய கண்கள் அகற்றப்பட்டுள்ளன. அமெரிக்காவில், கண்களில் ஒரு குறிப்பிட்ட சொட்டு மருந்தைப் போட்டுக்கொண்ட 81 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.Artificial Tears என்னும் கண் மருந்தின் 10 பிராண்ட்கள், குறிப்பாகச் சொன்னால், EzriCare Artificial Tears என்னும் கண் மருந்துதான் அதிக அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.இந்த மருந்தைப் பயன்படுத்திய 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 14 பேர் […]
சுவிட்சர்லாந்தில் வாழும் இந்தியப் பெண் ஒருவருக்கு செயற்கை கருவூட்டல் சிகிச்சையின்போது நடந்த தவறுக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார். இயற்கையாக கருத்தரிக்காததால், அவர் செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார். இந்திய மருத்துவமனை ஒன்றில், பயாப்சி சோதனைக்காக அந்தப் பெண்ணின் உடலிலிருந்து திசு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. 10 நாட்களில் சோதனை முடிவுகள் வெளியாகும் என்று மருத்துவர்கள் கூற, சுவிட்சர்லாந்துக்கு திரும்பி, பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்திருக்கிறார் அவர். பரிசோதனை முடிவுகளுக்காக அந்தப் […]
எஸ்.ஜே.சூர்யா கோலிவுட்டில் ஒரு திரைப்பட இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் ஒரு நடிகராக தனது எல்லைகளை மெதுவாக விரிவுபடுத்தினார், இப்போது நன்கு அறியப்பட்ட நடிகர்களில் ஒருவராக எஸ்.ஜே.சூர்யா இருக்கிறார். மேலும் 2021 இல் சிம்புவுடன் இணைந்து அவரது ‘மாநாடு’ திரைப்படம் வெளியான பிறகு வில்லனாக நடிக்த்து அசத்தினார். அதேபோல் விஜய் நடித்த மெர்சல் படத்திலும் வில்லனாக மிரட்டினார்.. தற்போது, ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்ற சலசலப்பு வலுத்துள்ளது. […]
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியில் அதிரடியான மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்சியின் கொழும்பு மேற்கு அமைப்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்துசமுத்திரத்தில் மூழ்கிய சீன கப்பலில் இருந்து ஏழுபேரின் உடல்களை இலங்கை சுழியோடிகள் மீட்டுள்ளனர். மத்திய இந்து சமுத்திரத்தில் சீனாவின் மீன்பிடிக் கப்பல் ஒன்று மூழ்கியது. இதில் இருந்து ஏழுபேரின் உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை 39 பேருடன் மூழ்கிய மீன்பிடிக்கப்பலில் இருந்தே ஏழுபேரின் சடலங்களை இலங்கை சுழியோடிகள் மீட்டுள்ளனர். கப்பலின் கபின் பகுதியில் இலங்கை சுழியோடிகள் உடல்களை கண்டுபிடித்தனர் என சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
மணிப்பூரில் நேற்று கலவரம் நடந்த பகுதியில், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது. மணிப்பூரில் 64 சதவீதமாக இருக்கும் மேதேயி சமுதாய மக்கள் மலைப் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதி இல்லை. மலைப் பகுதிகளில் குக்கி இன பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்நிலையில் மேதேயி சமுதாய மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு […]