இலங்கை செய்தி

புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நாடாளுமன்றக் குழு!

  • April 12, 2023
  • 0 Comments

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின் நியமனம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம். எம். நைமுதீனின் நியமனத்துக்கு உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதனுடன் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டுள்ள தகவல்!

  • April 12, 2023
  • 0 Comments

லங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியின் இலங்கை விஜயம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை என நான் மீண்டும் மீண்டும் கூறியுள்ளேன். சோஃபா (SOFA) ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மீள மதிப்பீடு செய்யவோ தமது நாட்டுக்கு எந்த எண்ணமும் […]

இலங்கை செய்தி

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு.. கொலையில் முடிந்த சம்பவம் !

  • April 12, 2023
  • 0 Comments

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரிகம பொது வர்த்தக நிலையத்தில் வியாபாரத்திற்காக வந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கொலை நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் அடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மீரிகம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் கொலையை செய்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணின் பரிதாப நிலை

  • April 12, 2023
  • 0 Comments

ஹிக்கடுவ தொட்டகமுவ பாலத்திற்கு அருகில் உள்ள மொலபு ஓய ஆற்றிலிருந்து நேற்று முன்தினத் பிற்பகல் ரஷ்ய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் மிதந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். கிரிஸனோவஸ்கியா செனியா என்ற 35 வயதுடைய பெண், கடந்த ஒக்டோபர் மாதம் முதல் ஹிக்கடுவை கல்வல வீதியிலுள்ள ரிவர் குடிசையில் தங்கியுள்ளார். சுமார் மூன்றரை மாதங்களுக்கு முன்னர் ரஷ்ய பெண்ணான இவர் இலங்கை வந்துள்ளார். ஆற்றில் அவரது […]

இலங்கை செய்தி

இலங்கையில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு

  • April 12, 2023
  • 0 Comments

இலங்கையில் குடிவரவுத் திணைக்களம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு முன்னதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் வந்து தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை செய்தி

கொழும்பில் மில்லியன் கணக்கான பணத்துடன் சிக்கிய இருவர்

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு, கெசல்வத்தை (வாழைத் தோட்டம்),  டாம் வீதியில் 8.2 மில்லியன் ரூபாய் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணமானது உண்டியலின் ஊடான சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விசேட அதிரடிப்படையினரால் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான இருவரில் முக்கிய சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் […]

இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணத்தை கொண்டுவந்து தருமாறு நாமல் கோரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

ராஜபக்சக்களின் பணம் உகண்டாவில் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இதனை ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொலன்னாவ பகுதியில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூட்டத்தலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு நாமல் கோரிக்கை விடுத்தார் . நாமல் ராஜபக்ச 18 டொலர் மில்லியனை தோளில் சுமந்துசெல்வதை கண்டதாக அன்று கூறினர். ராஜபக்சக்களின் பணம் விமானம்மூலம் உகண்டாவுக்கு எடுத்து செல்லப்பட்டது எனவும் கூறப்பட்டது. அவ்வாறு எடுத்து […]

இலங்கை செய்தி

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கைக்கு கிடைத்த இடம்

  • April 12, 2023
  • 0 Comments

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10வது இடத்தில் உள்ளது. உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, ​​சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது. உணவுப் பணவீக்க விகிதம் 59 வீதத்துடன் இலங்கை, பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன

இலங்கை செய்தி

விடுமுறை திட்டங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்!! பொலிஸார் எச்சரிக்கை

  • April 12, 2023
  • 0 Comments

ஏப்ரல் பண்டிகை காலத்தின் போது, தமது பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, சமூக ஊடகங்களில் வெளியில் இருக்கும் இடங்கள் போன்ற முக்கியமான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். […]

இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு தப்பிச் சென்று நடுக்கடலில் மாட்டிக்கொண்ட தமிழர்கள்

  • April 12, 2023
  • 0 Comments

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலொன்றில் மறைந்திருந்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற நால்வரை காலி துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 25, 31 மற்றும் 32 வயதுடைய இருவர் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏறி சந்தேகநபர்கள் குழு மறைந்துள்ளனர். பின்னர் கப்பல் பயணிக்கத் தொடங்கியது மற்றும் கப்பலின் கேப்டன் சூயஸ் கால்வாய் […]

You cannot copy content of this page

Skip to content