சீனாவின் உள்ளங்கையை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்
சீனாவில் தொழில்நுட்பத் துறை முன்னேற்றம் கட்டணம் செலுத்தும் முறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ச்சிங் நகரில் உள்ளங்கையை ‘ஸ்கேன்’ செய்து கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டாசிங் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பெய்ச்சிங் செல்லும் ரயில் சேவைக்குக் கட்டணம் செலுத்த அதைப் பயன்படுத்தலாம். அதற்கு உள்ளங்கை அடையாள முன்பதிவு அவசியமாகும். ஒருமுறை பதிந்துகொண்டால் போதும். புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. WeChat செயலி மூலம் அதற்கான அங்கீகாரத்தை நிறைவு செய்ய வேண்டும். […]