இலங்கை

திருமணமத்திற்கு தயாராகிய பெண் மீது அசிட் வீச்சு!

  • May 27, 2023
  • 0 Comments

வெலிகம,  மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு (அசிட்) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அமிலத்தை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த யுவதி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளான யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் […]

இலங்கை

சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை!

  • May 27, 2023
  • 0 Comments

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது. இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற அமைப்பு கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை இணையத்தளத்தில் ஆரம்பித்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற நம்பகதன்மை மிக்க மனித உரிமை அமைப்பு ஜெனரல்சவேந்திரசில்வா குறித்த 50 பக்க ஆவணமொன்றை தயாரித்து 2020 ஜூலை மாதம் பிரிட்டிஸ் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாக அறிகின்றோம் […]

இலங்கை

இராஜதந்திர நோக்கங்களுக்காக 3 தூதரகங்களை அமைக்க நடவடிக்கை!

  • May 27, 2023
  • 0 Comments

ஈராக், ருமேனியா மற்றும் Cyprus  ஆகிய நாடுகளில் இராஜதந்திர நோக்கங்களுக்காக இலங்கை தூதரகங்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த நாடுகளில் அதிகளவான இலங்கையர்கள் இருப்பதனால் அவர்களைக் கவனித்துக் கொள்ள தூதரகங்கள் அமைப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊலிசரள மற்றும் ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கு முன்னதாக செயற்பட்ட நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று நாடுகளிலும் இலங்கை தூதரகங்களை அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து […]

இலங்கை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்?

  • May 27, 2023
  • 0 Comments

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தை ஜனக ரத்நாயக்கவிற்கு நிதியமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தை ஜனக ரத்நாயக்க ஏற்றுக்கொண்டதாகவும்நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான […]

ஆப்பிரிக்கா

முதலைகள் பண்ணையில் விழுந்த முதியவர் : 40 முதலைகள் கடித்து குதறியதால் பலி!

  • May 27, 2023
  • 0 Comments

கம்போடியாவில் முதலைகள் பண்ணையில் விழுந்த   முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 72 வயது முதியவர் ஒருவர், முதலைகள் பண்ணையில் முட்டையிட்ட ஒரு முதலையை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட போது  கூண்டிற்குள் விழுந்துள்ளார். இதன்போது சுமார் நாற்பது முதலைகளால் அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. “முட்டையிடும் கூண்டிலிருந்து முதலையை அவர் துரத்திக் கொண்டிருந்த போது, அவர் பயன்படுத்திய குச்சியை முதலை பிடித்து இழுத்துள்ளமையால் அவர் நிலைத்தவறி கூண்டிற்குள் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கோர் வாட்டின் புகழ்பெற்ற இடிபாடுகளின் […]

செய்தி பொழுதுபோக்கு

தளபதி தலையிலேயே கை வைத்த பயில்வான் ரங்கநாதன் மீது கொந்தளித்த ரசிகர்கள்!!!

  • May 27, 2023
  • 0 Comments

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். அது மட்டுமின்றி, சினிமா விமர்சகராகவும், பத்திரிகையாளராகவும் இருந்து வருகிறார். அடிக்கடி சர்ச்சையான விஷயங்களையே டார்கெட் செய்து பேசி வரும் இவர் தற்போது விஜய் தலையிலேயே கை வைத்துள்ளார். தளபதி விஜய் விதவிதமான விக் வைத்து படகங்ளில் நடித்து வருவதாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இதனால் கடுப்பான, தளபதியின் ஆருயிர் ரசிகர்கள்… பாரபச்சம் பார்க்காமல், பயில்வானை சமூக வலைத்தளத்தில் பிரிந்து மேய்ந்து வருகிறார்கள். குறிப்பாக […]

பொழுதுபோக்கு

லியோ ஆடியோ லான்ச்… விஜய் எடுத்த அதிரடி முடிவு…

  • May 27, 2023
  • 0 Comments

வாரிசு திரைப்படம் வெளியானதுமே விஜய்யின் லியோ பட அப்டேட் டைட்டில் டீசர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் நீண்ட நாட்களுக்க்ப்பிறகு த்ரிஷா கதாநாயகியாகணைந்துள்ளார்.மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். லியோ படத்தில் சஞ்சய் தத் தான் விஜய்யின் அப்பாவாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பல […]

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் VIP பயணிகள் முனையத்தில் விசேட பரிசோதனை!

  • May 27, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போது உரிய பரிசோதனைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தை மக்கள் தொடர்ந்தும் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் […]

இலங்கை

இலங்கைக்கு 604 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக அறிவிப்பு!

  • May 27, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைக்கு 604 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 30 புதிய திட்டங்களுக்கான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை பெற்றுள்ளதாக சட்டமியற்றுபவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய கொள்முதல் விலை  295.62 ரூபாயாகவும், விற்பனை விலை  […]

செய்தி தமிழ்நாடு

உணவகத்தில் பணியாற்றும் 15 வயது சிறார்கள்

  • May 27, 2023
  • 0 Comments

திருச்சி திண்டுகல் தேசிய நெடுஞ்சாலை இடையே உள்ள நடுப்பட்டி சுங்க சாவடி அருகே அண்ணம் சைவ அசைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் உணவகத்தில் முழுவதும் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் உணவு பரிமாறுவதும் டேபில்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் படிப்பதை தவிர்த்து வேலைகளை செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையில் உணவகம் முழுவதும் சிறார்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]