ஜிம்பாப்வேயில் இடிந்து விழுந்த அணை : 05 குழந்தைகள் பலி!
கிழக்கு ஜிம்பாப்வேயில் அணை இடிந்து விழுந்ததில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருவதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. சமீபத்திய வாரங்களில் பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து நாட்டின் கிழக்கில் உள்ள தொலைதூர மாவட்டமான சிபிங்கேயில் உள்ள அணை இடிந்து விழுந்துள்ளது. இதில் ஐந்து குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காணாமல்போனதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனமான சிவில் […]