ஆசியா

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட காபி தயாரிப்புகளுக்கு தடை விதித்த சிங்கப்பூர்!

  • March 14, 2025
  • 0 Comments

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட காபி தயாரிப்பில் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து இருப்பதாக அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த காபி தயாரிப்புகளுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. உள்ளூர் மின் வணிக தளங்களில் விற்கப்படும் உடனடி காபி கலவையான கோபி பெனும்புக்கில் மருத்துவ மேற்பார்வை தேவைப்படும் சக்திவாய்ந்த மருந்தான தடாலாஃபில் இருப்பதை சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) கண்டறிந்ததாகக் கூறியது. ஆண் பாலியல் செயல்திறனை மேம்படுத்துவதாகக் கூறி இந்த தயாரிப்பு விளம்பரப்படுத்தப்பட்டது. இந்நிலையில்  உடனடியாக தயாரிப்பை விற்பனை செய்வதைத் […]

பொழுதுபோக்கு

அக்கட தேசத்து ஹீரோயினை நம்ப வச்சு மோசம் செய்த இயக்குனர்…

  • March 14, 2025
  • 0 Comments

சமீபத்தில் வெளியான அந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அந்த நடிகரும் இயக்குனரும் செம ஹேப்பி. ஆனா அந்த நடிகை மட்டும் அப்செட்டில் இருக்கிறாராம். பக்கத்து மாநிலத்திலிருந்து நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை படத்தில் இன்னொரு ஹீரோயின் இருக்கும் விஷயமே கடைசிவரை தெரியாதாம். இயக்குனர் கதை சொன்ன போது அப்படியே இந்த விஷயத்தை மூடி மறைத்திருக்கிறார். நடிகையும் தனக்கு ஒரு நல்ல பிரேக் இப்படத்தின் மூலம் கிடைக்கும் என நம்பி ஓகே சொல்லி […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

  • March 14, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.86 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.17 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. […]

இலங்கை

இலங்கை – முன்னாள் அமைச்சர்களின் சொகுசு வீடுகளை கோரும் வெளிநாட்டு தூதரகங்கள்!

  • March 14, 2025
  • 0 Comments

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள், தங்கள் அலுவலகங்களை இயக்குவதற்கு அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் பல்கலைக்கழக விடுதிகளுக்கும் அமைச்சர்களின் சொகுசு வீடுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அமைச்சர் சொகுசு வீடுகளை கோரிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் எண்ணிக்கை 20 ஆகும்.    

வட அமெரிக்கா

கிரீன்லாந்தை இணைக்கும் தீவிர முயற்சியில் டிரம்ப் – நேட்டோவின் உதவியை பெற முயற்சி

  • March 14, 2025
  • 0 Comments

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தீவிரமாக்கியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நேட்டோ கூட்டணியின் தலைமைச் செயலாளர் மார்க் ரூட்டரைச் சந்தித்து டிரம்ப் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சர்வதேச பாதுகாப்பை விரிவுபடுத்த கிரீன்லந்தை இணைத்துக்கொள்வது முக்கியம் என்று அவரிடம் டிரம்ப் கூறியுள்ளார். கிரீன்லாந்தை வசப்படுத்தும் யோசனையை டிரம்ப் பலமுறை வெளியிட்டிருக்கிறார். அதைச் செயல்படுத்த நேட்டோவின் உதவி தேவைப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிரீன்லாந்தை கையகப்படுத்தும் டிரம்ப்பின் யோசனையை அந்தத் தீவின் […]

வாழ்வியல்

அதிக இனிப்பு சாப்பிட தோன்றுகிறதா? அவதானம்

  • March 14, 2025
  • 0 Comments

இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது சக்கரை வியாதியை ஏற்படுத்தும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அதிக இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட காரணம் எண்ணற்ற உடல், மன மற்றும் உளவியல் பிரச்சனையால் இருக்கலாம். சர்க்கரை எடுத்துக்கொள்வது விரைவான ஆற்றலை வழங்குகிறது என்பது உண்மைதான் என்றாலும், அதிகமாக எடுத்து கொள்வது ஆழமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சமநிலையற்ற இரத்த சர்க்கரை நிலை ஆகும். உடலில் இரத்த சர்க்கரை அளவு மிக […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் தீ விபத்து – காயமின்றி உயிர் தப்பிய 172 பயணிகள்

  • March 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்த 172 பயணிகளும் ஊழியர்களும் அவசரச் சறுக்குப் பாதையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன் விமான இறக்கையின் மீது பயணிகள் நின்று கொண்டிருந்ததைக் காண முடிந்தது. டாலஸ் செல்லவிருந்த விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வு ஏற்பட்டதால் டென்வருக்குத் திருப்பிவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு குறிப்பிட்டது. நுழைவாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்தது. நெருப்பு அணைக்கப்பட்டுவிட்டது. […]

ஆசியா

ஜப்பானில் பணிநேரத்திற்கு முன்பதாகவே வேலையை ஆரம்பித்த ஊழியர்கள் – 11 மில்லியன் யென் வழங்க உத்தரவு!

  • March 14, 2025
  • 0 Comments

ஜப்பானில்  ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வேலையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பொது ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 11 மில்லியன் யென் (£57,000) கூடுதல் நேர ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிஃபு மாகாணத்தின் கினன் நகரில் உள்ள 146 அரசு ஊழியர்களும் காலை 8.25 மணிக்கு, நிலையான தொடக்க நேரத்தை விட ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே பணிக்கு வரத் தொடங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். அப்போதைய மேயர் ஹிடியோ கோஜிமா பிறப்பித்த இந்த உத்தரவு, அந்த (2021) ஆண்டு […]

இலங்கை

இன்று ஆரம்பமாகும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா!

  • March 14, 2025
  • 0 Comments

இன்றைய தினம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா ஆரம்பமாகிறது நாளை காலை நடைபெறவுள்ள திருநாள் திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறும் என யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார் வழமை போல இந்த வருடமும் இந்திய இலங்கை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கின்றனர். இன்று மாலை 4 மணியளவில் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதை, திருப்பலி, கருணை ஆராதனை என்பன நடைபெறவுள்ளன. இதனையடுத்து புனித அந்தோனியாருடைய திருச்சொரூப பவனி நடைபெறவுள்ளது. […]

உலகம்

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம்!

  • March 14, 2025
  • 0 Comments

டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். C38 கேட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ அணைக்கப்பட்டதாகவும், மாலை 6:15 மணி நிலவரப்படி யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிலையம் தெரிவித்துள்ளது. விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.