ஆசியா

கொரோனாவால் சிரிக்க மறந்த ஜப்பானியர்கள் : ஒரு மணி நேரத்திற்கு 4550 ரூபாயை கொடுத்து சிரிக்க பயிற்சி எடுக்கும் மக்கள்!

  • June 7, 2023
  • 0 Comments

கொரோனா பெரும் தொற்று உலகளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது. பெருமளவிலான மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டே வாழ்வதற்கும் கற்றுக் கொண்டார்கள். அத்துடன் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. இந்நிலையில், ஜப்பானியர்கள் கொரோனா தொற்றுக்கு அஞ்சி மாஸ்க் அணிந்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 8 வீதமானோரே மாஸ்க் அணிவதை நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்த ஜப்பானிய மக்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். இதனையடுத்து […]

பொழுதுபோக்கு

அடக்கடவுளே!! நாக சைதன்யா படத்துக்கு இப்படி ஒரு நிலையா??

  • June 7, 2023
  • 0 Comments

‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் கஸ்டடி. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இந்த படத்தில், பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்திருந்தார், அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி செட்டி நடித்திருந்தார். சரத்குமார், அரவிந்தசாமி, பிரேம் ஜி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் மே 12 ஆம் தேதி, […]

ஐரோப்பா

ஜேர்மனில் 82 வயது முதியவருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • June 7, 2023
  • 0 Comments

ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று, 82 வயது முதியவர் ஒருவருக்கு இறுதி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஜேர்மன் நகரமான Aurichஐச் சேர்ந்த ஒருவர், கப்பல் பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். அவருக்கு 800 யூரோக்கள் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறதாம்.ஆகவே, தனது நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக கஞ்சா விற்கத் துவங்கியுள்ளார் அவர். ஆனால், ஜேர்மனியில் பொழுதுபோக்குக்காக கஞ்சா பயன்படுத்த தடை உள்ளது.ஆகவே, அந்த 82 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகாரிகள் அந்த நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரியிருந்தனர். […]

உலகம்

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க்கு கிடைத்த இடம்

உலகின் செலவு மிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதுமே செலவுமிக்க நகரமாக நியூயார்க் ஆக காரணமாக மாறியுள்ளது. நியூயார்க் எப்பொழுதும் ஒரு வேலை மையமாகவும், உலகெங்கிலும் உள்ள மக்களுக்காக பணிபுரியும் ஒரு கனவு நகரமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக வெளிநாட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் பகுதிகளில், நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அந்த பகுதிகளில் அதிகரித்து காணப்படுவதும் ஒரு காரணமாகும். ஏற்கனவே உள்ள பல […]

ஐரோப்பா

ககோவ்கா அணை பகுதியில் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – செலன்ஸ்கி குற்றச்சாட்டு!

  • June 7, 2023
  • 0 Comments

ககோவ்கா அணை உடைப்பால் சுமார் இலட்சக் கணக்கான மக்கள் சாதாரண குடிநீர் இன்று தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றின் அழிவை  முற்றிலும் வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் அவர் விமர்சித்துள்ளார். குறித்த பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்ற நிலையில் அவர்களுக்கு அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யர்கள் உதவவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். உக்ரைன் துருப்புகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த செலன்ஸ்கி உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள […]

பொழுதுபோக்கு

“வந்து கொண்டிருக்கிறேன் ராவணா” வெளியானது ‘ஆதிபுருஷ்’ ட்ரைலர்…. அட்டகாசம்!!

  • June 7, 2023
  • 0 Comments

ஓம் ராவத் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரிப்பில், பிரபாஸ், ராகவனான (ராமர்) நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மிக பிரமாண்ட பட்ஜட்டில், 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 16 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக… இப்படத்தின் ப்ரீ -ரிலீஸ் ஈவென்ட் இன்று திருப்பத்தில் நடந்தது. திருப்பதியில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மிக […]

இலங்கை

300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு வார இறுதியில் நீக்கம்!

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை, இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளது. இன்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது, இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க முன்னெடுத்த தீர்மானங்களால், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் அதேவேளை, அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள […]

இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் குறித்து விசாரணை : மருதங்கேணி பொலிஸாருக்கு அழைப்பு!

  • June 7, 2023
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணைக்கு வருமாறு, மருந்தங்கேணி பொலிஸாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்தள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் ஊடாகவே இந்த அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பகுதியில் கடந்த 3 ஆம் திகதியன்று மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் காண்பிக்காத ஒருவர் துப்பாக்கியைக் காண்பித்து தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். […]

ஐரோப்பா

ஜெனீவாவில் பழிக்கு பழிவாங்க காத்திருக்கும் பெற்றோர் – வெளியாகியுள்ள திடுக்கிடும் தகவல்

  • June 7, 2023
  • 0 Comments

ஜெனீவாவில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப் பழி வாங்க, அவரது குடும்பத்தினர் காத்திருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அச்சம் உருவாகியுள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள Thônex என்னுமிடத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் பழிக்குப் பழி வாங்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே, அந்தப் பகுதி இளைஞர்கள் வீடுகளுக்குள் அடைந்துகிடக்கிறார்களாம்.இதற்கிடையில், கடந்த சில நாட்களில் அந்த பகுதிக்கு பல முறை பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளது அந்த […]

இந்தியா

600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னையில் போராட்டம்!

தமிழகத்தில் வசிக்கும் சுமார் 600 ஈழத் தமிழ் ஏதிலிகள் குடியுரிமை கோரி சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்/ அத்துடன் இந்தியாவில் அதிக காலம் தங்கியிருப்பதற்கான அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். ஏதிலி அந்தஸ்து தமது சுதந்திரத்தையும் வாழ்க்கையில் வாய்ப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. தங்கள் பிள்ளைகளுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. அவர்கள் கல்லூரியில் பட்டம் பெற்றாலும், தனியார் நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு அமர்த்துவதில்லை, அரச வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே அவர்களில் பலர் அன்றாடக் […]