ஐரோப்பிய நாடொன்றில் அதிர்ச்சி – பூனைகளை காப்பாற்ற சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
பெல்ஜியத்தில் 78 செல்லப் பிராணிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் உறைந்த நிலையில் இருந்த பிராணிகளின் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 25 பூனைகளைக் காப்பாற்றுவதற்காக விலங்கு மீட்பு அமைப்பு ஒன்று அந்த வீட்டிற்குச் சென்ற நிலையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.. அங்கு 75 பூனைகள், 3 நாய்கள் ஆகியவற்றின் சடலங்கள் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில அழுகிக்கொண்டிருந்ததாகவும் சிலவற்றில் கண்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. விலங்குகள் புறக்கணிக்கப்பட்டதாக அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவத்தைக் கண்டதே […]