நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகளால் 100 பேர் படுகொலை, பலர் மாயம்
நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 100 பேர் உயிரிழந்ததாக ஆம்னேஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தெரிவித்தது. நைஜீரிய நேரப்படி சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. “பலரை இன்னமும் காணவில்லை. பலர் காயமடைந்தனர். அவர்களுக்குப் போதிய மருத்துவ உதவி கிடைக்கவில்லை. குடும்பங்கள் படுக்கையறைகளில் பூட்டப்பட்டனர். வீடுகள் எரியூட்டப்பட்டதில் கிராமவாசிகள் கருகி உயிரிழந்தனர்,” என்று ஆம்னேஸ்டி இன்டர்நேஷனல் நைஜீரியா, எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.