ஐரோப்பா

நேட்டோவில் சேர உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படாது – ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்!

  • June 19, 2023
  • 0 Comments

அடுத்த மாதம் நடைபெறும் உச்சிமாநாட்டில் உக்ரைனை கூட்டணியில் சேர நேட்டோ அழைப்புவிடுக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை நடுப்பகுதியில் வில்னியஸில் நடைபெறும் உச்சிமாநாட்டில் நேட்டோ தலைவர்கள் உக்ரைனை கூட்டணியில் சேர அழைக்க மாட்டார்கள் என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறியுள்ளார். “வில்னியஸ் உச்சிமாநாட்டில் மற்றும் உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புகளில், நாங்கள் முறையான அழைப்பை வெளியிடுவது பற்றி விவாதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், உக்ரைனை நேட்டோவுடன் எவ்வாறு நெருக்கமாக நகர்த்துவது என்பது பற்றி தலைவர்கள் பேசுவார்கள் என்று அவர் […]

இலங்கை

கடனை செலுத்த முடியாமால் இளைஞர் எடுத்த தவறான முடிவு! மீட்கப்பட்ட கடிதம்

கடனை செலுத்த முடியாத இளைஞர் ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு பகுதியில் பதிவாகியுள்ளது. புதுக்குடியிருப்பு – கைவலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபரால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம்

பில்லியனர்கள் அதிகளவு வாழும் நாட்டை பற்றி உங்களுக்கு தெரியுமா?

  • June 19, 2023
  • 0 Comments

உலகில் அதிக செல்வந்தர்களை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவும் ஒன்று. இங்கு 50 மாநிலங்களில்  47 மாநிலங்களில் ஒருவராவது பில்லியனராக இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் தரவரிசையில் உள்ள பில்லியனர்களின் மொத்த சொத்து  $1.5 டிரில்லியன் ஆகும். உலகில் உள்ள சில பணக்காரர்களின் தாயகமாக அமெரிக்கா உள்ளது. ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 47 மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு பில்லியனர் உள்ளனர். அலாஸ்கா, டெலாவேர் மற்றும் மேற்கு வர்ஜீனியா ஆகிய […]

பொழுதுபோக்கு

சின்னத்திரையில் நுழைகிறாரா விக்னேஷ் சிவன்? வெளியான தகவல்

நடிகை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன், சின்னத்திரை ரிவி நிகழ்ச்சியில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன், பின்பு அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அதில் இவர் எடுத்த நானும் ரௌடி தான் என்ற திரைப்படம் திருப்பு முனையாக இருந்துள்ளது. ஆம் இப்படத்தில் தான் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அஜித்தின் 62வது படத்தினை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், ஆனால் […]

ஆசியா

குறைந்த செலவில் பூட்டானில் தங்குவதற்கு ஓர் அரிய வாய்ப்பு!

  • June 19, 2023
  • 0 Comments

பூட்டான் சுற்றுலா பயணிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொவிட் தொற்றுநோய் காரமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக முடங்கியிருந்த அந்நாட்டின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க பல திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இதன்படி சுற்றுலா பயணிகள் ஒரு இரவு அங்கு தங்குவதற்கு செலவிடும் கட்டணத்தை   $65 இல் இருந்து $200 ஆக உயர்த்தியது.  பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த கட்டணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை நடைமுறைக்கு வரும், […]

பொழுதுபோக்கு

நம்பி இந்த ஒருவரால் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!! என்ன நடந்தது?

  • June 19, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரை பேமஸ் ஆக்கியது தெலுங்கு படங்கள் தான். தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் ராஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் என்கிற பட்டத்தையும் பெற்றுத்தந்தது. அந்த அளவுக்கு இளம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் ராஷ்மிகா. நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது அனிமல் என்கிற இந்தி படம் தயாராகி வருகிறது. இதில் […]

இலங்கை

ஜூன் 29 இல் புனித ஹஜ் பெருநாள்! கொழும்பு பெரிய பள்ளிவாசல்

நாட்டில் துல் ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதையடுத்து புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் 29 ஆம் திகதி கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புனித துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறையை  தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

ஐரோப்பா

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள சிபிலிஸ் நோய்

  • June 19, 2023
  • 0 Comments

ஒரு காலகட்டத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் மட்டுமே காணப்பட்டதாக கருதப்படும் மோசமான நோய் ஒன்று இங்கிலாந்தில் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இரண்டு உலகப்போர்களுக்குப் பின் அதிகரிக்கத் துவங்கிய நோய் சிபிலிஸ் என்னும் பாலுறவு மூலம் பரவும் நோய். பெனிசிலின் என்னும் விலைமதிப்பில்லாத ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், ஆணுறைகள் பயன்பாட்டைத் தொடர்ந்தும் குறையத் தொடங்கியது இந்நோய். தற்போது இங்கிலாந்தில் இந்த சிபிலிஸ் நோய் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில், 15 சதவிகிதம் அதிகரித்து 8,700 பேருக்கு இந்நோய் தொற்றியுள்ளது தெரியவந்துள்ளது. […]

உலகம்

ரஷ்யாவிற்கு, சீனா ஆயுத உதவிகளை வழங்காது என்பதை மீளுறுதி செய்துள்ளது!

  • June 19, 2023
  • 0 Comments

உக்ரைனில் போரிட ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்ற வாக்குறுதியை சீனா புதுப்பித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் இன்று (19) சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இருப்பினும், சீன நிறுவனங்கள்  உக்ரைனில் அதன் ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதற்கு ரஷ்யா பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குவது பற்றி எங்களுக்கு தொடர்ந்து கவலைகள் உள்ளன என்றும் பிளிங்கன் கூறினார். இதுகுறித்து சீன அரசு மிகுந்த விழிப்புடன் […]

ஐரோப்பா

ஜேர்மனியில் கிடைத்த 2ம் உலகப்போர்க்கால வெடிகுண்டு; 8,100 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

  • June 19, 2023
  • 0 Comments

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 8,100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் ஹானோவர் நகரில் இரண்டாம் உலகப்போர்க்கால பிரித்தானிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அதை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக ஹானோவர் நகரில் வாழ்ந்த சுமார் 8,100 பேர், தங்களுக்குத் தேவையான மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டார்கள். அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]