ஆஸ்திரேலியா

உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்கள்

  • June 22, 2023
  • 0 Comments

உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் மீண்டும் 02 ஆஸ்திரேலிய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. சமீபத்திய தரவுகளுக்கமைய, மெல்பேர்ன் நகரம் 03வது இடத்திலும், சிட்னி நகரம் 04வது இடத்திலும் உள்ளன. கோவிட் தொற்றுநோய்களின் போது இந்த இரண்டு நகரங்களும் தரவரிசையில் சற்று கீழே சென்றுவிட்டன. சுகாதார சேவைகள் – கல்வி – சுற்றுச்சூழல் நட்பு – உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் இந்தக் குறியீடு வெளியிடப்படுகிறது. உலகில் வாழத் […]

இந்தியா

உச்சக்கட்ட வெப்பத்தினால் கடும் நெருக்கடி – மீண்டுவர போராடும் இந்தியா

  • June 22, 2023
  • 0 Comments

இந்தியாவில் உட்பட ஆசிய நாடுகளில் கடும் வெப்பம் ஆசியா வட்டாரத்தைச் சுட்டெரிப்பதுடன் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரத்திலிருந்து சுமார் 170 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. பீஹார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் அந்த மரணங்களுக்கும் வெப்பத்துக்கும் சம்பந்தமில்லை என்று உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். பாலியா (Ballia) மாவட்டத்தில்தான் அனைத்து மரணங்களும் நேர்ந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். மாசுகலந்த நீரால் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவித்தன. அதனை விசாரிக்கக் குழு […]

இலங்கை

இலங்கையில் லொத்தர் சீட்டு விலைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

  • June 22, 2023
  • 0 Comments

இலங்கையில் லொத்தர் சீட்டின் விலையை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு மற்றும் தேசிய லொத்தர் சபை ஆகியன இதனை தீர்மானித்துள்ளன. அதனடிப்படையில், லொத்தர் சீட்டொன்றின் விலை 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தீர்மானத்தினூடாக பொதுமக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர் சங்கத்தின் தலைவர் நிஷாந்த மாரம்பகே தெரிவித்துள்ளார்.

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகின் முதலாவது AI மூலம் இயங்கும் DJ அறிமுகம்!

  • June 22, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் முழுநேர DJ ஒன்று முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா வானொலி நிலையத்தால் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. இதனால் பல துறைகளில் பலவித மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளன அந்தவகையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வானொலி நிலையம், செயற்கை நுண்ணறிவு […]

இலங்கை

இலங்கை – தென்கொரியா இடையில் ஆரம்பமாகும் நேரடி விமான சேவை

  • June 22, 2023
  • 0 Comments

இலங்கைக்கும் தென் கொரியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். கொரிய விமான நிறுவனத்தினால் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் இலங்கை பணியாளர்களை கொரியாவிற்கு அழைத்துச்செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதமாகி வருவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ […]

ஆசியா

உலகின் சிறந்த விமான நிறுவனமாக தெரிவாகிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

  • June 22, 2023
  • 0 Comments

உலகின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) நிறுவனம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தை பிடித்து இருந்தது, அதை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான Skytrax World Airlines விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஜூன் 20 அன்று பாரிஸில் நடைபெற்றது. அங்கு முதல் விருதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் பெற்றுக்கொண்டார். பின்னர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை ஒன்றில் குடியேறிய அகதிகளுக்கு நேர்ந்த கதி

  • June 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றில் அகதிகள் குடியேறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை குறித்த அகதிகளை பொலிஸார் வெளியேற்றினர். மத்திய பரிசில் உள்ள Place du Palais Royal பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 450 அகதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கான தங்குமிடங்களை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கிட்டத்தட்ட 77 நாட்களாக அவரக்ள் அங்கு தங்கியிருந்தனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்காக அமுலாகும் நடவடிக்கை

  • June 22, 2023
  • 0 Comments

Aஜெர்மனி நாட்டில் இயங்குகின்ற வெளிநாட்டவர் அலுவலகங்கள் டிஜிடல் முறையில் இயங்க வேண்டும் என்று என ஜெர்மனிய அதிபர் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஜெர்மனிய அதிபர் ஓலா சொய்ஸ் அவர்கள் எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டவர் காரியாலங்களை டிஜிடல் முறையில் தொழிற்படுத்த வேண்டும் என கோரிக்கைகயை முன்வைத்துள்ளார். அதாவது கடந்த காலங்களில் வெளிநாட்டவர் காரியாலங்களின் செயற்பாடுகள் கால தாமதமாக செல்கின்ற காரணத்தினால் இவ்வாறாக நவீன மயப்படுத்த வேண்டும் என இவர் தெரிவித்து இருக்கின்றார். இதன் காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது ஏற்கனவே ஒரு […]

இலங்கை

கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

  • June 21, 2023
  • 0 Comments

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரமும் எதிர்வரும் வாரமும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தேசிய மட்டத்திலும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மட்டத்திலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாட்டில் கடந்த 3 வாரங்களில் 7069 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 2 வயது மகனால் தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணித் தாய்

  • June 21, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கர்ப்பிணித் தாய் மற்றும் அவரது கருவில் இருந்த குழந்தை ஜூன் மாதம் 2 வயது மகன் தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதால் உயிரிழந்தனர். ஜூன் 16 அன்று, 31 வயதான திருமதி லாரா இல்க், தனது மகன் தற்செயலாக துப்பாக்கியைப் பிடித்து முதுகில் சுட்டதாகக் கூறி போலீஸை அழைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைய கதவை உடைத்தனர் மற்றும் படுக்கையறையில் லாரா இல்க் மற்றும் அவரது மகன் இருப்பதையும், அவருக்கு […]