புலம்பெயர்வோரைக் கவரும் வகையில் ஜேர்மனியில் புதிய சட்டம் நிறைவேற்றம்
சில நாடுகள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையில், ஜேர்மனியோ அதற்கு நேர் மாறாக, புலம்பெயர்வோரைக் கவர்வதற்காக சட்டம் ஒன்றையே நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சாராத புலம்பெயர்வோர், ஜேர்மனிக்கு வருவதை எளிதாக்கும் வகையில், ஜேர்மன் நாடாளுமன்றம் சட்டம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.ஏஞ்சலா மெர்க்கலில் கன்சர்வேட்டிவ் கட்சியினரும், வலது சாரி AfD கட்சியினரும், அந்த சட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர். ஏற்கனவே புகலிடம் நிராகரிக்கப்பட்டும் ஜேர்மனியில் வாழ்வோரையும் இந்த சட்டம் ஜேர்மனியில் வேலை செய்ய அனுமதிக்கும் என்று கூறி […]