பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாரின் “தலைவர் 170” குறித்து சுடச்சுட புது அப்டேட்

  • June 25, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் ஏற்கனவே நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியில் படமாக்கி வருகிறார்கள். இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் என்று தெரிகிறது. […]

இலங்கை

மின்கட்டண திருத்தம் தொடர்பில் மக்கள் தங்களின் கருத்துக்களை கூற வாய்ப்பு!

  • June 25, 2023
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட மக்கள் கலந்தாய்வு அமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான பொது கலந்தாய்வு அமர்வு எதிர்வரும்  (ஜூன் 27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என பொதுப் பயண்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், […]

வாழ்வியல்

பால் அதிகம் குடித்தால் ஆபத்தா?

  • June 25, 2023
  • 0 Comments

உடலுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கியமானதாக உள்ளது. ஆனால் தேவைப்படும் அளவை விட பால் அதிகம் எடுத்துக் கொள்வது சில ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறாக பாலை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது என்ன நேர்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பாலில் கால்சியம்,  கொழுப்பு,  கார்போஹைட்ரேட்,  புரதம்,  கலோரிகள் உள்ளன. ஆகவே பால் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கால்சியம் சத்து அதிகரித்து எலும்பு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். பால் விரைவில் சீரணமாகாத உணவு என்பதால் […]

பொழுதுபோக்கு

வெற்றிமாறனுக்காக காத்திருக்காமல் வெற்றி இயக்குனருடன் கூட்டணி அமைத்த சூர்யா!

  • June 25, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் இறுதிவரை படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா மாரி செல்வராஜின் இயக்கத்தில் வாடி வாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது மாரி செல்வராஜ் விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த படம் […]

இலங்கை

இலங்கையின் உள்விகாரங்களில் மேற்கத்தேய நாடுகளின் தலையீடு – ரஷ்யா கண்டனம்!

  • June 25, 2023
  • 0 Comments

இலங்கை உள்ளிட்ட சுதந்திர நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்குலக நாடுகள் தலையிட முயல்வதை ரஷ்யா கண்டித்துள்ளது. பல்வேறு நாடுகளின் கலாச்சார மற்றும் சமையல் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்ய தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த  இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யன்  மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் சில சர்வதேச விவகாரங்களில் இலங்கையின் நடுநிலை தன்மையை பாராட்டினார். மேற்கத்திய நாடுகளை தங்கள் சொந்த உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்திய […]

பொழுதுபோக்கு

இலங்கை போராளியின் கதையா “கேப்டன் மில்லர்”? ஹொட் நியுஸ்….

  • June 25, 2023
  • 0 Comments

‘கேப்டன் மில்லர்’ என்ற பிரம்மாண்ட படத்திற்காக அருண் மாதேஸ்வரனுடன் தனுஷ் இணைந்து நடித்தது பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. இலங்கையை தளமாகக் கொண்ட சீர்திருத்தவாதியின் பாத்திரத்தில் இவர் நடிகர் நடிக்கிறார் என்றம் கூறப்படுகின்றது. சில நாட்களுக்கு முன்பு கேப்டன் மில்லரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக தனுஷுடன் சிறப்பு படப்பிடிப்பை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஃபர்ஸ்ட் லுக் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், தனுஷின் பிறந்தநாளில் (ஜூலை 28) கேப்டன் மில்லர் டீசரை வெளியிட […]

இலங்கை

அஸ்வெசும’ நலன்புரி நலத்திட்டத்தின் பயனாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் – ஷெஹான் சேமசிங்க

  • June 25, 2023
  • 0 Comments

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளின் மதிப்பீட்டின் பின்னர் ‘அஸ்வெசும’ நலன்புரி நலத்திட்டத்தின் பயனாளிகள் பற்றிய  இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் அநீதி காணப்பட்டால், நலன்புரிப் பலன் வாரியம் தலையிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு வெளிப்படையானது எனவும், அரசியல் தாக்கம் இல்லாதது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,  […]

இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் : வேட்புமனுக்களை இரத்து செய்ய யோசனை!

  • June 25, 2023
  • 0 Comments

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலுக்கான முன்மொழிவுகள் உள்ளுராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரசு ஊழியர்களுக்கு பல்வேறு […]

இலங்கை

சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டம்!

  • June 25, 2023
  • 0 Comments

பொருளாதார பாதிப்பால் மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் சமூர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் நேற்று (24.06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர் ’58 இலட்ச குடும்பங்களில் 11 இலட்ச குடும்பங்களின் ஒருநாள் வருமானம் 900 ரூபாவாக காணப்படுவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. […]

ஆப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் சுரங்கம் இடித்து விழுந்ததில் 31 பேர் பலி!

  • June 25, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் உள்ள தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 31 தொழிலாளர்கள் பலியாகினர். அத்துடன் பல காயமுற்றதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் 16 பேர்  போலீசாரிடம் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.  விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.