இலங்கை

கொழும்பில் எட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

கொழும்பு மாநகர சபைக்குள்பட்ட 8 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும், குறித்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி குடியிருப்புகளை இடிக்க முன்வந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வேகந்த அடுக்குமாடித் திட்டம், பம்பலப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை குடியிருப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை குடியிருப்புத் திட்டம், கம்கருபுற குடியிருப்புத் திட்டம், B36 மாளிகாவத்தை குடியிருப்புத் திட்டம், ஜி. எச். […]

ஐரோப்பா

அமெரிக்க ராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற கோரி ஜேர்மனியர்கள் போராட்டம்

  • June 25, 2023
  • 0 Comments

அமெரிக்க ராணுவத்தினர் ஜேர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன்னர். ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் குறித்து நேட்டோ படையினர் ஜேர்மனியின் ரம்ஸ்டெயின் விமானப்படைத்தளத்தில் வியூகங்கள் வகுத்து அங்கிருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர். இதற்கு ஜேர்மனியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வீதியில் திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி போரை நீட்டிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

அறிந்திருக்க வேண்டியவை

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிராகன்: ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட டிராகன் விக்டோரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட அல்லது அழிந்துபோகும் நிலையில் இருக்கும் டிராகன்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1969 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏர்லெஸ் டிராகன் என்று அழைக்கப்படும் 15 செமீ நீளமுள்ள விலங்கை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெல்போர்னுக்கு மேற்கே உள்ள புல்வெளிகளில் ஏராளமாக இருந்த இந்த இனம், வாழ்விட உருவாக்கம் மற்றும் வேட்டையாடுதல் காரணமாக அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில், இவ்வகை விலங்குகள் இன்னும் எஞ்சியுள்ளமை தெரியவந்துள்ளதாக விக்டோரியாவின் […]

பொழுதுபோக்கு

நெட்பிலிக்ஸ் தொலைக்காட்சியில் முதல் 10 இடத்துக்குள் வந்த கனடிய தமிழ் பெண் நடித்த தொடர்-புகழும் ஊடகங்கள்

  • June 25, 2023
  • 0 Comments

Photo: JESSICA BROOKS/NETFLIX நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ வெப் தொடர் தற்போது நெட்ஃபிக்ஸில் டாப் 10இல் உள்ளது. ரசிகர்களுக்கு இந்த கலாச்சார உணர்வை அளித்ததற்காகப் பாராட்டப்பட்டது. மிண்டி கலிங் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 8ஆம் திகதி வெளியான தொடர் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ – சீசன் 4. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் ஒருவர் தனது பள்ளிப்பருவத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து இத்தொடர் பேசுகிறது. மைத்ரேயி ராமகிருஷ்ணன் […]

இலங்கை

யாழில் வீடொன்றின் முன் ஒட்டப்பட்ட விசித்திரமான எச்சரிக்கை பலகை

  • June 25, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம், நாச்சிமார் கோயில் வீதியிலுள்ள வீடொன்றின் முன்பாக விசித்திரமான அறிவித்தல் காணப்படுகிறது. அதில் “சூனியம் வைக்கப்பட்டுள்ளது. வாகன விபத்து நிச்சயம் ஏற்படும். தயவு செய்து வீதிகளில் குப்பை கொட்டாதீர்கள்” என எழுதப்பட்டுள்ளது. இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட அது தற்போது வைரலாகி வருகிறது.

இலங்கை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • June 25, 2023
  • 0 Comments

இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் […]

இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்? மஹிந்த யாப்பா அபேவர்தன

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 5 புதிய உறுப்பினர்கள் தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கூடிய அரசியலமைப்பு பேரவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளது. முன்னாள் தேர்தல் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா […]

இந்தியா

எகிப்து அதிபருடன் சந்திப்பு; நாட்டின் உயரிய ஆர்டர் ஆப் தி நைல் விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவம்

பிரதமர் மோடி எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அவரை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலகப் போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக […]

வட அமெரிக்கா

நீர்மூழ்கிக் கப்பல் விபத்து குறித்து விசாரணை – கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை

  • June 25, 2023
  • 0 Comments

நீர் மூழ்கிக் கப்பல் விபத்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என கனடிய பாதுகாப்பு போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பிரபல டைட்டானிக் கப்பலின் இடுப்பாடுகளை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளை தாங்கிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று அண்மையில் விபத்துக்குள்ளானது.இந்த விபத்து காரணமாக குறித்த நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த நிலையில் குறித்த நீர் மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளான விதம் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.இந்த விபத்து […]

இந்தியா

புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்

  • June 25, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் ( 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு ( 20) சோனி என்ற பெண்ணுடன் 23ம் திகதி திருமணம் நடைபெற்றது. அன்றைய தினம் திருமண நிகழ்ச்சிக்கு பின் இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை 5 மணியளவில் ஷிவ் வீர் தான் வைத்திருந்த கோராடியால் வீட்டின் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த சகோதரன் சோனு அவரது மனைவி சோனியை கொடூரமாக […]