இராட்சத பலூனிலிருந்து குதித்த நபருக்கு நேர்ந்த கதி
சுவிட்சர்லாந்தில், இராட்சத பலூன் ஒன்றிலிருந்து நெடுஞ்சாலையில் விழுந்த ஒருவர் பரிதாபமாக பலியானார். சுவிட்சர்லாந்தின் Bernஇல்,நேற்று காலை 7.00 மணியளவில் இராட்சத பலூனில் பறந்துகொண்டிருந்த ஒருவர் நெடுஞ்சாலையில் விழுந்தார். ஆனால், அவர் அந்த பலூனிலிருந்து வேண்டுமென்றே குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கிறார்கள். அப்போது அந்த பலூனில் ஆறு பேர் பயணித்துக்கொண்டிருந்துள்ளார்கள். பலூனை இயக்கியவர் உடனடியாக அதை அருகிலுள்ள Hinterkappelen என்னும் கிராமத்தில் தரையிறக்கியுள்ளார். குதித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை […]