அஸ்வெசும திட்டம் : போராடுவதற்கு பதிலாக மேன்முறையீடு செய்யுங்கள் – ஜீவன் தொண்டமான்!
அஸ்வெசும சமூக நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி இருந்தும் உத்தேச பெயர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அது தொடர்பில் எதிர்வரும் ஜுலை 10 ஆம் திகதிக்குள் மேன்முறையீடு செய்யுமாறு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”மக்களை வீதிகளுக்கு இறக்கி போராட்டங்களை நடத்துவதைவிட அவர்களை மேன்முறையீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறு அரசியல் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான பெயர் பட்டியலை தயாரிக்கும்போது […]