பொழுதுபோக்கு

கேப்டன் மில்லர் படத்தில் எதிர்பாராத திருப்பம்!! விலகிய நடிகர்

  • June 29, 2023
  • 0 Comments

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னண நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், உறியடி விஜய்குமார், உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். […]

இந்தியா

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி! போலீஸார் எடுத்த நடவடிக்கை

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி போலீஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 3ம் திகதி முதல் வன்முறை நடந்து வருகிறது. 100க்கும் மேற்பட்டோர் பலியாகிய வன்முறைக்கு பாஜகவின் பிரித்தாளும் அரசியலே காரணம் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக அக்கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]

ஐரோப்பா

வாக்னரின் கிளர்ச்சியை தொடர்ந்து புட்டினின் நிலைப்பாடு என்ன : உலக தலைவர்கள் விவாதம்!

  • June 29, 2023
  • 0 Comments

வாக்னர் படையினர் மேற்கொண்ட கலகத்திற்கு பிறகு ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இன்று (29.06) ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைந்து விவாதிக்கவுள்ளனர். Volodymyr Zelenskyy வீடியோ இணைப்பு மூலம் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். மற்றும் நேட்டோ பொது செயலாளர் Jens Stoltenbergகும் இதில் கலந்துகொள்ளவுள்ளார். பல ஐரோப்பிய தலைவர்கள் கிளர்ச்சிக்குப் பிறகு ரஷ்ய தலைவரின் நிலைப்பாட்டை ஏற்கனவே விவாதித்துள்ளனர், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் உட்பட, பலர் இந்த நிகழ்வு புட்டினை பலவீனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை

அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ் விஜயம் செய்துள்ள மைத்திரி

  • June 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(29) காலை நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.சைவ பண்பாட்டுடன் வேட்டி அணிந்து வந்த மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் அவர் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.ஆரியகுளம் நாகவிகாரைக்கு சென்ற மைத்திரிபால […]

வட அமெரிக்கா

Uber செயலியை பயன்படுத்தி 800 இந்தியர்களை அமெரிக்கா கொண்டு சேர்த்த நபர்..

  • June 29, 2023
  • 0 Comments

அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை கொண்டுசென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியதாக கூறப்படுகிறது. வாகன சவாரிக்கான uber செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவுக்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. சுமார் 4 […]

ஐரோப்பா

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு தடுமாற்றத்துடன் பதிலளித்த பைடன்!

  • June 29, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் செய்தியாளர்களின் கேள்விக்கு தடுமாற்றதுடன், பதிலளிப்பது அமெரிக்கர்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது. அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) இல் நடைபெறவுள்ளது. இதற்காக பைடன் நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சிகாகோ சென்றிருந்த அவரிடம், உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் வாக்னர் படையினர், திடீரென மொஸ்கோவிற்கு எதிராக திரும்பினர். இதனால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பலவீனமடைந்துள்ளரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பைடன், ‘உண்மையில் சொல்வது கடினம். […]

இலங்கை

சந்தேகத்தின்பேரில் இரு இளைஞர்களை வீடு புகுந்து தாக்கிய 50க்கும் மேற்பட்டோர்

  • June 29, 2023
  • 0 Comments

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகித்த இளைஞர் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தனர் என்றும் பொலிஸார் கூறினர். புத்தூர் […]

ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!

  • June 29, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ட்ரஸ்ஸல் டிரஸ்ட்’  என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர்,  உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும்,  வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும்,  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து […]

ஆசியா ஆஸ்திரேலியா

அதிபர் ஜின்பிங்குடன் நியூசிலாந்து பிரதமர் பேச்சுவார்த்தை

  • June 29, 2023
  • 0 Comments

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கடந்த ஜனவரியில் பதவி விலகினார். அவருக்கு பின்னர் நாட்டின் பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சீனா சென்றுள்ளார். அவர் பதவியேற்புக்கு பின்னர் முதன்முறையாக சீனாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் முக்கிய ஏற்றுமதி சந்தையாக நியூசிலாந்து உள்ளது. மேலும் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில் இந்த பயணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. டியான்ஜினில் நடைபெற்ற உலக […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ள மஹிந்த!

  • June 29, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில், சமூர்த்தி அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே மகிந்த ராஜபக்ஷ மேற்படி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த […]