பொழுதுபோக்கு

யானை, புலியைத் தொடர்ந்து சிங்கத்தையும் விட்டு வைக்காத சிவகார்த்திகேயன்…

  • June 30, 2023
  • 0 Comments

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்கிற ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. அவற்றை பொதுமக்கள் சுற்றிப்பார்ப்பதோடு, தத்தெடுக்கும் திட்டத்தையும் பூங்கா நிர்வாகம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அங்குள்ள விலங்குகளை தத்தெடுப்பவர்கள் அதற்கான பராமரிப்புச் செலவுகளை அளிக்க வேண்டும். அவர்கள் அந்த விலங்குகளுக்கு செலவழிக்கும் தொகைக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன் யானை, புலி போன்ற விலங்குகளை […]

ஆசியா

சீனாவில் தனது ஊழியர்களுக்கு 10 ஆயிரம் யுவான்களை ஐந்து வருடத்திற்கு இலவசமாக வழங்கும் பிரபல நிறுவனம்!

  • June 30, 2023
  • 0 Comments

சீனாவில் பெற்றோர் பண உதவித்தொகையாக 10 ஆயிரம் யுவான்களை வழங்க நிறுவனம் ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி  சீனாவின் Trip.com குழுமம், ஜூலை 1 முதல் இந்த திட்டத்தை வழங்க தீர்மானித்துள்ளது. சீனாவில் உள்ள ஒரு பெரிய தனியார் நிறுவனம் முன்னெடுத்துள்ள முதல் முயற்சி இதுவாகும். குறித்த நிறுவனமானது 400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனமாகும். குறித்த நிறுவனத்தில் பணியாறும்  ஊழியர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்தாண்டுகளுக்கு 10,000 […]

இலங்கை

யாழில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!

  • June 30, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிராக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2023 ஜனவரி மாதம் முதல் மே மாத இறுதிவரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் […]

வட அமெரிக்கா

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட லொரி மீது மோதிய ரயில் ; 16பேர் படுகாயம்

  • June 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சியாட்டிலுக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரெயில் செல்லும் பாதையில் உள்ள மூர் பூங்கா அருகே தண்ணீர் லொரி ஒன்று தண்டவாளத்தை கடக்க முற்பட்டது. அப்போது அந்த லொரி மீது ரெயில் மோதி தடம் புரண்டது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் தொடர்பில் ஆராய நடவடிக்கை!

  • June 30, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பில் ஆராய பிரதேச செயலக மட்டத்தில் மேன்முறையீட்டு சபையை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நடவடிக்கைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்ம ஸ்ரீ தெரிவித்துள்ளார். இதனிடையே அஸ்வெசும நலன்புரி திட்டங்கள் தொடர்பில் இதுவரை 40000 முறைப்பாடுகள் மற்றும் ஆட்சேபனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் எதிர்வரும் 10ம் திகதி வரை மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை […]

ஆசியா

சீனாவில் பெற்றோராகும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த பிரபல நிறுவனம்

  • June 30, 2023
  • 0 Comments

சீனாவின் மிக பிரபலமான ஒன்லைன் பயண நிறுவனம் பெற்றோராகும் தங்கள் ஊழியர்களுக்கு 50,000 யுவான் ஊக்கத்தொகை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜூலை 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த திட்டமானது அடுத்த 5 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதிக வயதான மக்கள்தொகையுடன் போராடும் சீனாவில் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் முதல் முயற்சி இதுவென கூறுகின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 400 மில்லியன் பயனாளர்களை கொண்ட இந்த நிறுவனம் […]

வட அமெரிக்கா

தாங்க முடியாத வெப்ப அலையால் மெக்சிகோவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

  • June 30, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் தாங்க முடியாத வெப்ப அலைகள் காரணமாக குறைந்தது 100 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவின் சிலப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்த நிலையில், அதிகப்படியான வெப்ப தாக்கம் காரணமாக குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் மூன்று வாரகால நீண்ட வெப்ப அலைகள் காரணமாக அதிகப்படியான ஆற்றல் தேவை […]

உலகம்

கனடா காட்டுத்தீயினால் அமெரிக்கர்களுக்கு ஆபத்து : மக்களுக்கு எச்சரிக்கை!

  • June 30, 2023
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டா பகுதியில் ஏற்பட்ட காட்டுதீ தற்போது கிட்டத்தட்ட 76 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக சுமார் 160 மில்லியன் டொன் கார்பன் இதுவரை வெளியிடப்பட்டுள்ளதாகவும்,  இதனால் அண்டை நாடான அமெரிக்காவின் டெட்ராய்ட்,  சிகாகோ மற்றும் மினியாபோலீஸ் நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 8 கோடி மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக அந்த நாட்டின் […]

இலங்கை

முன்னால் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் காலாவதியான குளிர்பானம்

  • June 30, 2023
  • 0 Comments

யாழ்.உடுப்பிட்டி – மகளீர் கல்லூரியில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி – மகளிர் கல்லூரியில் விளையாட்டு மைதானம் ஒன்றுக்கான நிதி உதவி வழங்கியமையை ஒட்டிய நிகழ்வில் முன்னாள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டுள்ளார். இந்தநிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட தேனீர் விருந்துக்காக உடுப்பிட்டியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 4 குளிர்பான போத்தல்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பு பிரிவினர் பரிசோதித்தபோது […]

இலங்கை

DDOவிற்க எதிராக வாக்களிக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி!

  • June 30, 2023
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் (DDO) திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நாளை (01.07) நடைபெறவுள்ளது. இதன்போது உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் திட்டம் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியின் தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.