இலங்கையில் அச்சுறுத்தும் பாதிப்பு – அதிகரிக்கும் மரணங்கள்
இலங்கையில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 48,963 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதில் மேல் மாகாணத்தில் 24,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜூன் மாதத்தில் 9,559 டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 61 பிரதேசங்கள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.