ஆசியா

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தற்கொலை சம்பவங்கள்!

  • July 1, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு 476 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இவர்களில் 317 பேர் ஆண்கள் எனவும்  மீதமுள்ள 159 பேர் பெண்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனைகள்,  வேலை வாய்ப்பு மற்றும் நிதிச் சிக்கல்கள்  காதல் உறவுகள் போன்ற காரணங்களுக்காக அதிகளவானோர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. உலகளாவிய ரீதியில்  ஆண் தற்கொலை இறப்புகள் பெண்களின் தற்கொலை இறப்புகளை விட அதிகமாக உள்ளதாக […]

பொழுதுபோக்கு

மீண்டும் வைரலாகும் வருண் – சக்தி ஜோடி.. வருணை “குரங்கா” என திட்டிய சக்தி

  • July 1, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மக்கள் லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது. பின் மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது. […]

இலங்கை

யாழில் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு

  • July 1, 2023
  • 0 Comments

பொலிஸ் அதிகாரிகள் என்ற ரீதியில் ஊடகவியலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது எப்படி அதே நேரம், பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளை நிறைவேற்றுவது எப்படி எந்த முறையில் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவே கருத்து தெரிவித்துள்ளார். வடமாகாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடன், பொலிஸார் ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தவிர்ப்பது என்பது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிகால் தல்துவேயினால் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்தார் அவர். […]

இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மைத்திரி

யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (01) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட அவர் நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார். சுகாதார அமைச்சராக அவர் இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டட தொகுதியையும் அவர் பார்வையிட்டார். […]

இலங்கை

கொழும்பு வைத்தியசாலையில் மருந்து ஒவ்வாமையினால் யுவதிக்கு நேர்ந்த கதி

  • July 1, 2023
  • 0 Comments

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 23 வயதுடைய யுவதியொருவர் மருந்து ஒவ்வாமியால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27 அன்று சந்தேகத்திற்கிடமான தொற்றுக்காக பாதிக்கப்பட்ட யுவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.சிகிச்சையின் போது, ​​நோயாளிக்கு வாய்வழி மருந்து கொடுக்கப்பட்ட பலனளிக்காததால் மருத்துவர்கள் அதே மருந்தை தடுப்பூசி வடிவில் கொடுத்துள்ளனர்.இதனையடுத்து யுவதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக மருத்துவமனையின் தலைவர் தெரிவித்துள்ளார். யுவதிக்கு கடுமையான ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்ட நிலையில்,உடனடியாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் கிட்டத்தட்ட எட்டு மணி […]

பொழுதுபோக்கு

ஜூலையில் வெளியாகும் புதிய இணைய தொடர் ‘ஸ்வீட் காரம் கோப்பி’

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் புதிய இணைய தொடர்களுக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. ‘சுழல்’, ‘வதந்தி’ , ‘ மொடர்ன் லவ் -சென்னை’ ஆகிய அசல் இணைய தொடர்களை வழங்கிய அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலை மாதம் ஆறாம் திகதி முதல் ‘ஸ்வீட் காரம் கோப்பி’ எனும் புதிய இணைய தொடர் வெளியாகிறது. இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கத்தில் எட்டு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த தொடரில் மூத்த […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்தின் மத்தியஸ்தத்தை ஏற்கமுடியாது ; ரஷ்ய தூதர் மறுப்பு

  • July 1, 2023
  • 0 Comments

உக்ரைன் போரில் சுவிட்சர்லாந்து மத்தியஸ்தம் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. பெரிய நாடுகள் பல, உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நாடாக, பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூன் 15ஆம் திகதி, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும் வகையில் சுவிட்சர்லாந்தில் ஒரு உலக சமாதான உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்யலாம் என யோசனை கூறியிருந்தார்.ஆனால், சுவிட்சர்லாந்தின் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ரஷ்ய தூதரான Sergei […]

இலங்கை

இலங்கையில் குடும்ப தலைவிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

  • July 1, 2023
  • 0 Comments

இலங்கையில் மதுபானத்தின் விலைகள் இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் வழங்கிய உத்தரவின் பேரில் இந்த வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கலால் வரி அதிகரிக்கப்பட்டதை அடுத்து அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி,  அனைத்து வகையான பீர் போத்தல்களின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 750 மில்லிலீற்றர் போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிகரெட்டுக்களுக்கான விலையும் […]

ஐரோப்பா

குரேஷியா-டுப்ரோவ்னிக் நகர மேயர் சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ள புது விதிமுறை

  • July 1, 2023
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று குரோஷியாவிற்கு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகின்றனர். இந்நிலையில் குரோஷியா நாட்டில் உள்ள டுப்ரோவ்னிக் என்ற நகரத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இனி சூட்கேஸ்களை எடுத்து வரக்கூடாது என புதிய விதிமுறைகளை நகர மேயர் அறிமுகப்படுத்யுள்ளார். அங்கு செல்லும் பயணிகள் சக்கரம் பொருந்தி இருக்கக்கூடிய சூட்கேஸ்களை பளிங்குக்கற்களால் ஆன பாதைகளில் இழுத்துச் செல்லும்போது ஏற்படும் சத்தம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதால் நகரத்தில் வசிக்கும் மக்களின் தூக்கம் பாதிக்கப்படுவதாக நீண்ட நாட்களாக புகார் […]

பொழுதுபோக்கு

நேற்று வெளியான “கேப்டன் மில்லர்” முதல்பார்வை படைத்த சாதனை

  • July 1, 2023
  • 0 Comments

தனுஷ் நடிக்க அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. இதையடுத்து, தனுஷ் படங்களில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அவர் நடித்து இதற்கு முன்பு வெளியான ‘கர்ணன்’ படத்தின் முதல் பார்வை 24 மணி நேரத்தில் 80 ஆயிரம் லைக்குகளைப் பெற்றது. நேற்று வெளியான ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பார்வை, தனுஷின் டுவிட்டர் கணக்கில், 20 மணி நேரத்திலேயே 97 ஆயிரம் லைக்குகளைக் கடந்துள்ளது. தற்போது […]