செய்தி வட அமெரிக்கா

ரொரான்டோ விமான நிலையத்தில் பலகோடி பெறுமதியான தங்கம் மாயம்

  • April 21, 2023
  • 0 Comments

கனடாவின் ரொரான்டோ விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம்  காணாமல் போனதை தொடர்பில் கனடாவின் பாதுகாப்பு தரப்பினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விமான நிலையத்தில் கண்டெய்னரில் 1,633 கிலோ தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குறித்த தங்கம் கையிருப்பு என்ன ஆனது என்பது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தங்கப் கையிருப்பு விடுவிப்பு தொடர்பில் நாட்டில் செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக வெளிநாட்டு […]

ராசிபலன்

இன்றைய நாளில் வெற்றி உங்களுக்கு

  • April 21, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம். அஸ்வினி : தீர்வு கிடைக்கும். பரணி : இலக்குகள் பிறக்கும். கிருத்திகை : […]

ராசிபலன்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம்

  • April 21, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் உண்டாகும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிடிவாத குணத்தினை குறைத்து கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் அஸ்வினி : சூட்சுமங்களை அறிவீர்கள். […]

ராசிபலன்

இன்று உங்கள் ராசியின் அதிர்ஷ்டம்

  • April 21, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது ஆலோசனைகளை பெறவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் நிறைந்த  நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள். அஸ்வினி : ஆலோசனைகள் […]

ஆப்பிரிக்கா

சூடான் மோதலில் 413 பேர் உயிரிழப்பு – ஐநா தகவல்!

  • April 21, 2023
  • 0 Comments

சூடானில் இடம்பெறும் மோதல்களால் 413 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3551 பேர் காயமடைந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் இன்று தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கரெட் ஹரீஸ் இதனைத் தெரிவித்தார். ‍மோதல்களில் சிக்கி  சிறார்கள் உயிரிந்துள்ளனர் எனவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். சூடானின் இராணுவத் தளபதி அப்தேல் ஃபத்தா அல் புர்ஹானுக்கு ஆதரவான படையினருக்கும் துணை இராணுவப் படையின் தளபதி மொஹம்மத் ஹம்தானி தாக்லோவுக்கு […]

ஆசியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • April 21, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் அருகே அமைந்துள்ள மொலுகா கடலின் வடக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்று மதியம் 3.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. சுனாமிக்கான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.  

இலங்கை

பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய மூன்று ஆசிரியர்கள்!

  • April 21, 2023
  • 0 Comments

மஹா ஓயாவில் உள்ள பாடசாலை ஒன்றில் 19 வயதுடைய மாணவனை தாக்கிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை ஆசிரியர்கள் பலரால் தாக்கப்பட்டதையடுத்து தனது குழந்தை மாயா ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 37 மற்றும் 43 வயதுடைய மஹா ஓயா மற்றும் பதியத்தலாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைதான ஆசியர்கள் இன்று தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

தென் அமெரிக்கா

பெருவில் மாணவி போன்று வேடமணிந்து பள்ளி கழிவறையில் பதுங்கியிருந்த 40 வயது நபர்!

  • April 21, 2023
  • 0 Comments

பெரு நாட்டில் மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளியில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார். ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கழிவறைக்குள் சென்ற மாணவிகளில் ஒருவர், உள்ளே மாணவிகள் போன்றே சீருடை, இரட்டை ஜடை மற்றும் மாஸ்க் அணிந்த நபர், கழிவறையில் இருந்ததைக் கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளார். இதன்போது பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், அந்த நபரை சூழ்ந்து […]

இலங்கை

அதிக வெப்ப நிலையுடனான காலநிலை மே இறுதிவரை நீடிக்கும் என அறிவித்தல்!

  • April 21, 2023
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக மனநலம் சார்ந்த பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக மனநலம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரூபி ரூபன் தெரிவித்துள்ளார். குறித்த வெப்ப காலநிலையாது  மே மாத இறுதி வரை தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், இது குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  அதிக வெப்ப நிலை காரணமாக குறிப்பிட்ட சில நோய் […]

ஐரோப்பா

ஆப்ராம்ஸ் டாங்கிகளுடனான பயிற்சியை ஆரம்பிக்கும் உக்ரைன்!

  • April 21, 2023
  • 0 Comments

உக்ரைன் படைகளுக்கு ஆப்ராம்ஸ் டாங்கிகளுடனான  பயிற்சியை அமெரிக்கா தொடங்க உள்ளது வரும் வாரங்களில்  இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மே மாத இறுதியில் ஜெர்மனியில் உள்ள கிராஃபென்வோஹ்ர் பயிற்சிப் பகுதிக்கு 31 டாங்கிகள் கொண்டுவரப்படும் எனவும்,  இரண்டு வாரங்களுக்குப் பிறகு துருப்புகள் பயிற்சியை தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. குறித்த பயிற்சி நடவடிக்கையானது  10 வாரங்கள் நீடிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You cannot copy content of this page

Skip to content