செய்தி

யாழில் வெயிலின் தாக்கம் தீவிரம் – நுங்கு விற்பனை அதிகரிப்பு

  • April 22, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் கற்பக விருட்சம் என அழைக்கப்படும் பனையின் நுங்கு பருவகாலம் ஆரம்பமாகிவிட்டது. யாழ். செம்மணியில் வீதி, அரியாலை மற்றும் யாழ். நகர்மத்திய பகுதிகளிலும்  நுங்கின் விற்பனை இன்று சூடுபிடித்துள்ளது. அதிகரித்து காணப்படும் வெப்பநிலை காரணமாக உடல் சூட்டினை தணிப்பதற்காக இந்த நுங்கினை பல பயணிகள் எடுத்தும்,உட்கொண்டும் வருகின்றனர் ஒரு நுங்கானது 100ரூபா முதல் 150ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதனை பலர் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.  

ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் வட்டி விகித உயர்வு குறித்து வெளியான தகவல்!

  • April 22, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வட்டி விகிதத்தை உயர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்துள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதற்கான வாய்ப்பு உள்ளது, அவற்றை வரும் மே 19 ஆம் திகதிக்கு முன் அனுப்ப வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் 0.35 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 3.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை செலுத்துவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எதிர்காலத்தில் […]

உலகம்

226 மில்லியன் டொலர் சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை

  • April 22, 2023
  • 0 Comments

Google தேடுதளத்தின் மூல நிறுவனமான Alphabet Incஇன் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு சம்பள விபரம் வெளியாகியுளளது. அதற்கமைய, கடந்த ஆண்டு அவர் சுமார் 226 மில்லியன் டொலர் மதிப்பிலான சம்பளத்தை வாங்கியதாக நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது. செலவுக்குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சராசரி ஊழியரின் சம்பளத்துடன் ஒப்புநோக்க 800 மடங்குக்கு மேல் அதிகமாக உள்ளது! உலகளவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் வேளையில் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. […]

ஐரோப்பா

பிரான்ஸில் மீண்டும் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

  • April 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மீண்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து மீண்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மே 1, உழைப்பாளர் தினம் அன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இது ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிரான 13 ஆவது நாள் போராட்டமாகும். அன்றைய நாளில் பிற்பகல் 2 மணிக்கு Place de la République சதுக்கத்தில் ஆரம்பமாகும் போராட்டம் Nation இல் சென்று நிறைவடைகிறது. பரிசில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு இலட்சம் […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் அதிக வெப்பம் காரணமாக மனநோய் ஏற்படும் அபாயம்

  • April 22, 2023
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர் ரூமி ரூபன் இதனை தெரிவிக்கிறார். இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடும் என சுட்டிக்காட்டியுள்ள மனநல மருத்துவர் ரூமி ரூபன், இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கின்றார். இதற்கிடையில், மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக […]

இலங்கை

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

  • April 22, 2023
  • 0 Comments

இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்கள், ரமழான்  மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை  கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி. ரமழான் காலம் மற்றும் நோன்புப் பெருநாள் என்பன மதிப்புமிக்க […]

வாழ்வியல்

உடல் எடையைக் குறைக்க உதவும் யோகா பயிற்சி!

  • April 22, 2023
  • 0 Comments

உடல் எடைக் குறைக்க உதவும் யோகா பயிற்சி தொடர்பில் இந்த பதிவில் அறிந்துக் கொள்ள முடியும். சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 ஆசனங்களைக் கொண்டது. வேலை காரணமாக காலையில் யோகா செய்ய நேரம் இல்லாதவர்கள் இந்த ஒரு ஆசனத்தையாவது தினமும் செய்யுங்கள். இந்த சூர்ய நமஸ்காரத்தைச் செய்வதால் நுரையீரலின் செயல்பாடுகள் மேம்படுகிறது. டயபெட்டீஸ் வருதற்கான காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. தசைகளை வலுபெறச் செய்கிறது. ஹைபர் டென்ஷன் ஆகாமல் இருக்க உதவுகிறது. பெப்டிக் அல்சர் வருவதைத் தடுக்கிறது. சியாடிகா எனும் […]

இலங்கை

ராஜபக்ஷ சகோதரர்களை சீனாவுக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை!

  • April 22, 2023
  • 0 Comments

ராஜபக்ஷ சகோதரர்களுடன் தற்போதையே ஆட்சியாளர்களையே சீனாவிற்கு நாடு கடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ. ஜங்கரநேசன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயத்துறை சார்ந்த போதிய நிபுணத்துவம் இல்லாததாலேயே நாட்டில் விவசாயத்துறை பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்துடன் குரங்குகளை ஏற்றுமதி செய்யாமல் ராஜபக்ஷ சகோதரர்களுடன் […]

உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
  • 0 Comments

உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலத்திலும் கடலிலும் மனிதர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிக்கை சொல்கிறது. ஒவ்வொரு கண்டமும் வறட்சி, வெள்ளம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நூறு ஆண்டுக்கும் மேலாக உலக வானிலை ஆய்வகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டாகத்தான் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளதாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதலில் மூவர் காயம்

  • April 22, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியில் டியுஸ்பேர்க்  நகரத்தில் அமைந்து இருக்கின்ற உடற்பயிற்சி செய்கின்ற ஒரு இடத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதாவது நேற்றைய தினம் ஏப்ரல் 19 ஆம் திகதி இனம் தெரியாத நபர் ஒருவர் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் அத்து மீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த சரமாரியான தாக்குதலின் போது 3 பேர் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவந்திருக்கின்றது. மேலும் பலத்த காயமடைந்த 3 […]

You cannot copy content of this page

Skip to content