மர்மப் பொருள் மீட்டகப்பட்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்
வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிறமான தூள் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களை அப்புறப்படுத்த அமெரிக்க இரகசியப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற தூள் அமெரிக்க இரகசிய சேவையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரகசியப் புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிறமான தூளில் கொக்கெய்ன் கலந்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நடந்த போது அதிபர் ஜோ […]