AK 64 – அஜித் வாங்கிய சம்பளம்தான் இப்ப ஹாட் நியூஸ்
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அஜித்தின் கரியர் பெஸ்ட் படமாகவும் GBU மாறியுள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் அஜித் நடிக்கவுள்ளார். ஆம், AK 64 படத்தை ஆதிக் இயக்க […]