இலங்கை செய்தி

நெடுந்தீவு படுகொலை!!! ஐவரை வெட்ட பயன்படுத்திய கத்தி மீட்பு

  • April 24, 2023
  • 0 Comments

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்றைய தினம் அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி […]

இலங்கை செய்தி

இளம் காதல் ஜோடிக்கு ஏற்பட்ட கவலைக்கிடமான நிலை

  • April 24, 2023
  • 0 Comments

மீன் வாங்கச் சென்ற இளம் பெண் லொறியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதுடன், அவரது காதலன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். களுத்துறை வெந்தேசிவத்த பிரதேசத்தில் வசித்து வந்த உதேனி நிமாஷா என்ற 23 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (23) இரவு களுத்துறையிலிருந்து மத்துகம நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் கல்அச்சேன சந்தியில் நிறுத்தி மீன் வாங்கிக் கொண்டிருந்தனர். அங்கு களுத்துறையில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த லொறியொன்று […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு எதிராக போரில் களமிறங்கிய புடினின் நெருங்கிய உறவினரின் மகன்

  • April 24, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரின் மகனும் உக்ரைனுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் மகன் இவ்வாறு போர்க்களத்தில் இறங்கியுள்ளார். நிகோலாய் பெஸ்கோவுக்கு இப்போது 33 வயது. நிகோலாய் பெஸ்கோவ் வாக்னர் கூலிப்படையுடன் உக்ரைனில் 6 மாதங்களாக சண்டையிட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பக்மவுத் பகுதியில் அவர் சண்டையில் ஈடுபட்டு வந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. நிகோலாய் பெஸ்கோவ் பிரிட்டனில் படித்தவர். சிறப்பாக […]

ஐரோப்பா செய்தி

சார்லஸ் மன்னரின் ஆட்சி ஆபத்தில்?

  • April 24, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்லஸ் மன்னரின் பொதுக் கருத்தின் இரண்டு ஆய்வுகள், பிரிட்டனில் உள்ள இளைஞர்கள் அரசர் அல்லது அரச குடும்பத்திற்கு அதிக அங்கீகாரம் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பனோரமா மற்றும் யூகோவ் இணைந்து நடத்திய பொதுக் கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, 58% மக்கள் இன்னமும் அரச தலைவனாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால் வாக்களிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் மாநிலத்தின் தலைவராக செயல்பட வேண்டும் என 26% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 58% மக்கள் அரசருக்கு ஆதரவாக இருப்பதும், […]

இலங்கை

ரஷ்யா – உக்ரைன் போர் : என்றும் இல்லாத வகையில் உயர்ந்த இராணுவ செலவீனங்கள்!

  • April 24, 2023
  • 0 Comments

உக்ரைன் போர் உலகளாவிய இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்ய போர் ஆரம்பித்ததில் இருந்து உலகம் முழுவதும்  மொத்தம் 1.79 டிரில்லியன் பவுண்டுகள் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் செலவீனங்கள், ஐரோப்பாவில் கூர்மையான உயர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஸ்வீடிஷ் சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது. உலகளவில் இராணுவ செலவீனம் 3.7 வீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் ஐரோப்பாவில் இராணுவ செலவீனம் 13 வீதம் அதிகரித்துள்ளதாக அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள செங்குத்தான அதிகரிப்பு […]

ஐரோப்பா

மொஸ்கோவில் ஒன்றுக்கூடும் ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்கள்!

  • April 24, 2023
  • 0 Comments

ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவலை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர்  ஹுலுசி அகர் உறுதிப்படுத்தினார். பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இப்பகுதியில் விரைவில் அமைதியையும், சமாதானத்தையும்  ஏற்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார். அமைச்சரின் கூற்றுப்படி, துருக்கி, ரஷ்ய மற்றும் சிரிய பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உளவுத்துறை தலைவர்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாஸ்கோவில் சந்தித்து கூட்டங்களைத் தொடர முடிவு செய்தனர். இதன்போது அடுத்தக் […]

ஐரோப்பா

மொஸ்கோவில் விழுந்து விபத்துக்குள்ளான எரிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன்!

  • April 24, 2023
  • 0 Comments

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள காட்டில் விழுந்து விபத்திற்கு உள்ளானதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்துகுள்ளான குறித்த ட்ரோன் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அது பாதியாக உடைந்து காணப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ட்ரோன் உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமாக இருக்கலாம் என்றும், எரிபொருள் தீர்ந்தமையால் விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கியேவ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  

இலங்கை

சஜித் மன்னிப்பு கோர வேண்டும் – வடிவேல் சுரேஸ்

  • April 24, 2023
  • 0 Comments

பசறை மடுல்சீமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு வருகை தாராத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எனது மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், என் மக்களின் முடிவே என் தீர்க்கமான அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்றும் தெரிவித்தார். பசறை பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த […]

ஐரோப்பா

உக்ரைன் மருத்துவர்களை ராணுவ சேவைக்கு கட்டாயப்படுத்தும் ரஷ்யா!

  • April 24, 2023
  • 0 Comments

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழும் மருத்துவர்களை, இராணுவ சேவைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதும் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் பலரும் வேறு நாடுகளுக்கு புலம்பெயந்துவிட்டனர். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து உக்ரைன் படைகளும் தீவிரமாக போரிடுகிறது. இதனால் ரஷ்ய […]

ஐரோப்பா

பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யா கலந்துகொள்ளுமா – கிரெம்ளின் பதில்!

  • April 24, 2023
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பதை விளாடிமிர் புடின் முடிவு செய்வார் என்று கிரெம்ளின் கூறுகிறது. பிரிக்ஸ் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. தென்னாப்பிரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் சுமூகமான உறவு இருந்தாலும், ஐ.சி.சி நீதிமன்றம் புடினை கைது செய்ய பிடியானை பிறப்பித்துள்ள காரணத்தினால் இந்த மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், வழக்கமான மாநாடு ஒன்றில் இந்த விடயம் குறித்து கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் கேள்வி எழுப்பினார். […]

You cannot copy content of this page

Skip to content