உலகம்

53 மில்லியன் ரூபாய் மோசடி செய்த இந்திய பிரஜை டெக்சாஸில் கைது!

  • July 8, 2023
  • 0 Comments

கொவிட் நிவாரண நிதிதிட்டத்தில் 53 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொற்றுநோய் பதிலளிப்பு பொறுப்புக் குழு (PRAC) மேற்கொண்ட விசாரணைகளுக்கு ஏற்ப அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நிதித் திட்டமான Paycheck Protection Program (PPP) திட்டத்தில் இருந்தும் பல்வேறு நிதி நிறுவனங்களிடம் இருந்தும் 53 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் ஓக்லஹோமா பகுதிகளில் […]

செய்தி பொழுதுபோக்கு

இனிமேல் ஹீரோ தான்… நோ வில்லன்… நடிப்பு இராட்சசன் பகீர் அறிவிப்பு

  • July 8, 2023
  • 0 Comments

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஃபஹத் பாசில். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் வெரைட்டியான கேரக்டரில் நடித்து வருகிறார். அதேநேரம் தமிழில் கெஸ்ட் ரோல், வில்லன் கேரக்டர்களில் மட்டுமே நடித்துள்ளார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால், விரைவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் ஃபஹத். ஃபஹத் பாசில். ஆரம்பத்தில் பல தோல்விப் படங்களில் நடித்து சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருந்த ஃபஹத், மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து வெரைட்டியாக மிரட்டி வருகிறார். […]

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கை வரும் கப்பல்! கடற்படை பேச்சாளர்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி,பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை வருகை தர உள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) […]

இலங்கை

கிழக்கு ஆளுநரின் அதிரடி நடவடிக்கை ;24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்

  • July 8, 2023
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள 48 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, இன்று(08)கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. 2017ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த […]

இந்தியா

சட்டமன்றத்தில் ஆபாச படம் பார்த்த விவகாரம் – வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்

  • July 8, 2023
  • 0 Comments

திரிபுரா மாநில சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். திரிபுரா சட்டமன்றத்தில் பாஜக MLA ஆபாச படம் பார்த்த புகாரில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். திரிபுரா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் பாஜக MLA ஜாதவ் லாக் நாத் ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சட்டப்பேரவை தொடங்கிய நாளிலே திப்ரா மோதா கட்சியைச் சேர்ந்த அனிமேஸ் […]

ஆசியா

நேபாளத்தில் மர்மநோய் பரவிவருகிறது – 300 பேர் பாதிப்பு!

  • July 8, 2023
  • 0 Comments

நேபாளத்தின் கலிகோட்டில் 300க்கும் மேற்பட்ட மக்கள் மர்ம நோய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து கலிகோட் மாவட்டத்தில் வைத்திய நிபுணர்கள் திரண்டுள்ளனர். நோயின் தன்மையை அறிய அவர்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. சுகாதார வல்லுநர்கள் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் மர்மமான நோயை விரைவாகக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான அவசியத்தை ஆராய்கிறது. இந்த நோயின் அறிகுறிகளாக,  காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, அடிநா அழற்சி, முகத்தில் தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கூறப்படுகிறது. இது பெண்கள் […]

இலங்கை

மட்டக்களப்பு பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

  • July 8, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று(07) மாலை யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தும்பங்கேனி சுரவனையடிஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று மாலை ஆலய வழிபாட்டுக்கு சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]

பொழுதுபோக்கு

‘எஸ்கே21’ படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த சாய் பல்லவி – வைரலாகும் புகைப்படங்கள்

திரையுலகில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை சாய் பல்லவி, தற்போது காஷ்மீரில் தனது நேரத்தை அனுபவித்து வருகிறார். சாய் பல்லவி தற்போது ‘எஸ்கே 21’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது, தயாரிப்பாளர்கள் காஷ்மீரில் ஒரு நீண்ட ஷெட்யூல் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். இப்போது, சிவகார்த்திகேயனின் திரைப்படமான ‘மாவீரன்’ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளால் இடைவேளை எடுத்துள்ளார், இது வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு […]

ஐரோப்பா

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு : ஐ.நா விசாரணையை கோரும் மொஸ்கோ!

  • July 8, 2023
  • 0 Comments

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு குறித்து விசாரணை செய்ய ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ஜூலை 11 அன்று கூட்டுமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து  ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த ரஷ்ய அதிகாரி, டிமிட்ரி பாலியன்ஸ்கி தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு “சுவாரஸ்யமான ஓரிரு பாரபட்சமற்ற பேச்சாளர்களை” ரஷ்யா அழைக்கும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை செய்வதில், ஸ்வீடன் மற்றும் பிற நாடுகளை அணுகுவதில் ரஷ்யா தோல்வியடைந்தது. ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கின் […]

இந்தியா

வன்முறைக் களமாக மாறிய மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்! 10பேர் பலி

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. ஆனால்  உள்ளாட்சித் தேர்தல் களம் வன்முறைக் களமாக மாறியுள்ளது. தேர்தல்களின் வாக்குப்பதிவின் போது பரவலான வன்முறையால் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நதியா, முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜகவும் தங்கள் கட்சியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. தேர்தல்களுக்கு வாக்களிக்க மக்கள் வரிசையில் நின்றதால் […]