பொழுதுபோக்கு

மாஸ்.. மாஸ்.. மாஸ்.. ஜவான் படத்திற்கும் விஜய்க்கும் இவ்வளவு நெருங்கிய தொடர்பு

  • July 8, 2023
  • 0 Comments

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தின் டிரைலர் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில், அதனை விஜய் வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக மிரட்டி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து உள்ளார். ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது. […]

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் படத்தில் விஜய் சேதுபதி வசனம் பேசுகிறாரா? அட என்ன சொல்றீங்க

சிவகார்த்திகேயனின் மாவீரன்திரைப்படம் ஜூலை 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வசனம் பேசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது திரைப்பட தயாரிப்பாளர்களால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த வாரம் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், […]

இலங்கை

பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே தேர்தல் வேட்பாளராக அறிவிப்போம் – சாகர!

  • July 8, 2023
  • 0 Comments

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் இன்று  (8.07 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதால் எமது […]

இலங்கை

இலங்கை வந்தடைந்த இந்திய கப்பல்! கரை தட்டிய கப்பலை மீட்டுச் செல்வதில் தாமதம்

பேசாலை நடுக்குடா கடற்கரை பகுதியில் நேற்று கரை தட்டிய கப்பல் மற்றும்  பாஜ்    என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை (8) மாலை பேசாலை நடுக்குடா கடற்கரையை வந்தடைந்துள்ளது. மாலைதீவில் இருந்து இந்தியாவின் தூத்துக்குடி நோக்கி  கொள்கலன் தாங்கியை இழுத்துக்கொண்டு வந்த கப்பல் ஒன்று இயந்திர கோளாறு காரணமாக மன்னார் பேசாலை நடுக்குடா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (7) மாலை கரை தட்டி உள்ளது. […]

ஐரோப்பா

இது கடுமையான முடிவு :கொத்துக் குண்டுகளை வழங்குவது குறித்து பைடன் கருத்து!

  • July 8, 2023
  • 0 Comments

கொத்துக் குண்டுகளை உக்ரைனிடம் ஒப்படைப்பது “கடினமான முடிவு” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவை சர்வதேச நாடுகள் எதிர்திருந்தன. இருப்பினும் உக்ரைன் ரஷ்யாவில் குறித்த குண்டுகளை பயன்படுத்தாது என அமெரிக்கா கூறியது. இந்த நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பைடன்,  இது எனது பங்கில் மிகவும் கடினமான முடிவு. மேலும், இதைப் பற்றி நான் எங்கள் கூட்டாளிகளுடன் விவாதித்தேன்”எனத் தெரிவித்துள்ளார். […]

உலகம்

ஈரானில் போலீஸ் நிலையம் மீது தாக்குதல்! 6 பேர் பலி

ஈரானின் தென்கிழக்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மற்றும் தற்கொலைப் படையினர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. Sistan-Baluchistan மாகாணத்தின் தலைநகரான Zahedan இல் இந்த தாக்குதல் இன்று நடந்துள்ளது. கடந்த ஆண்டு, சரியான ஹிஜாப் அணியாததற்காக ஈரானிய அறநெறிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குர்திஷ் பெண், பொலிசாரின் தாக்குதலின் போது உயிரிழந்தார் என நாடு தழுவிய ரீதியில் போராட்டம் வெடித்தது. […]

ஐரோப்பா

நதியைத் திருமணம் செய்து கொண்ட பிரித்தானிய இளம்பெண்!

  • July 8, 2023
  • 0 Comments

பிரித்தானிய இளம்பெண் ஒருவர், துர்நாற்றம் அடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டலைச் சேர்ந்த மேகன் ட்ரம்ப் (27)என்னும் இளம்பெண், துர்நாற்றமடிக்கும் நதி ஒன்றைத் திருமணம் செய்துகொண்டார்.சமூக ஆர்வலர்கள் பலர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்ட அந்த வித்தியாசமான திருமணத்தின் பின்னால் ஒரு நல்ல நோக்கம் உள்ளது. அவர் திருமணம் செய்துகொண்டது Avon என்னும் நதி. அது, பிரித்தானியாவின் 19ஆவது பெரிய நதி. அந்த நதி பிரிஸ்டல் நகரம் வழியாக ஓடுகிறது. மேகன், நீச்சலில் ஆர்வம் கொண்டவர் […]

வாழ்வியல்

100 நாட்கள் டயட் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

  • July 8, 2023
  • 0 Comments

நவீன காலத்தில் உடல் எடைக் குறைப்புக்கு பல முறைகள் வந்துவிட்டன. பெரும்பான்மையான மக்கள் 2-3 நாட்களிலேயே டயட் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பதையும் நம்புகின்றனர். ஆனால் இவை எல்லாம் ஆரோக்கியமற்ற முறைதான். பெரும்பாலும், உடல் எடையை குறைக்க சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான டயட் உணவினையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் டயட் என்ற பெயரில் உணவினை தவிர்த்து பானங்களை மாத்திரம் எடுத்துக்கொள்கிறார். இவ்வாறு செய்வதால் பயன்கிடைக்காது. மாறாக உங்களுடைய உடல் வைட்டமின்களை இழந்து சோர்வடையும். அப்படியென்றால் எது […]

தென் அமெரிக்கா

சாத்தானின் வேண்டுகோள் … மனைவியை கொன்று மூளையை சாப்பிட்ட கணவன்!

  • July 8, 2023
  • 0 Comments

மெக்சிகோவை சேர்ந்தவர் அல்வாரோ (32). இவரது மனைவி மரியா மான்செராட் (39).இந்த ஜோடி கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் செய்து கொண்டனர். மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஐந்து மகள்கள் உள்ளனர். அல்வாரோ சைத்தானை வழிபாடு செய்யும் குழுவை சேர்ந்தவர் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது. அல்வாரோ மனைவியை கடந்த் ஜூன் 29ம் திகதி கொலை செய்து உள்ளார். கத்தி, உளி மற்றும் சுத்தியலால் கொலை செய்து உள்ளார். பின்னர் உடல் […]

இலங்கை

தரமற்ற மருந்து பாவனையால் பறிப்போன ஒன்பது உயிர்கள்!

  • July 8, 2023
  • 0 Comments

தரமற்ற மருந்து பாவனையால் கடந்த மூன்று மாதங்களில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்த ஆரச்சி  தெரிவித்துள்ளார். சுகாதார துறையை தனியார் மயப்படுத்தவேண்டாம் எனக் கோரிக்கை வைத்துள்ள அவர், நோயாளர்களின் உயிரை பாதுகாக்குமாறும் வலியுறுத்தினார். ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் முறையற்ற சில செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு கொண்டு வரப்படும் மருந்துகள் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த மருந்துகளால் மூன்று மாதங்களில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]