ஆசியா

சீனாவில் கனமழையால் 10 மாகாணங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

  • July 9, 2023
  • 0 Comments

சீனாவில் 10 மாகாணங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாகாணங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் வடகிழக்கு மாகாணங்களான ஜிலின், ஹீலோங்ஜியாங் மற்றும் லியோனிங் ஆகியவற்றில் பலத்த மழையும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. கனமழை காரணமாக லியோனிங் மாகாணத்தில் மட்டும் 20 ஆறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. குய்ஷூ மாகாணத்தில் ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ள […]

இலங்கை

சி.டி இயந்திரங்களின் செயலிழப்பால் சிக்கலில் உள்ள வைத்தியசாலைகள் – கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் சுகாதாரத்துறை!

  • July 9, 2023
  • 0 Comments

அரச வைத்தியசாலைகளில் CT ஸ்கேன் சேவைகள் முற்றிலும் செயலிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மருத்துவர்கள் உட்பட நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக  44 CT ஸ்கேன், 13 MRI ஸ்கேன் , 02 PET ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளதாகவும், ஆனால் அவை தற்போது செயலிழந்துள்ளதாகவும்  கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அனுராதபுரம் மருத்துவமனையில் ஓராண்டுக்கு மேலாக காத்திருப்பு பட்டியல் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், 43 சி.டி ஸ்கேன் […]

இலங்கை

லண்டனில் இருந்து பெற்றோருடன் யாழ்ப்பாணம் வந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • July 9, 2023
  • 0 Comments

லண்டனில் இருந்து பெற்றோருடன் யாழ்ப்பாணம் வந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் யாழ்.வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி கடலில் குளிக்கச் சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடலில் மூழ்கிய சிறுவன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். லண்டனில் இருந்து உறவினரின் மரண சடங்கிற்கு வந்திருந்த 6 வயது சிறுவனே […]

தென் அமெரிக்கா

கலிபோர்னியாவில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 06 பேர் பலி!

  • July 9, 2023
  • 0 Comments

கலிபோர்னியாவில் ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (ஜுலை 08) இடம்பெற்றுள்ளது. Cessna C550 வணிக ஜெட் விமானம், லாஸ் வேகாஸில் இருந்து பயணித்த நிலையில், 85 மைல் தொலைவில் பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளாகியதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஆறுபேரும் பலியாகியுள்ளனர். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விபத்து குறித்து விசாரிக்கும் என்று FAA தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கார்களில் ஏற்பட்டுள்ள ஆபத்து – மீளக்கோரிய நிறுவனம்

  • July 9, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 13,000க்கும் மேற்பட்ட ஹூண்டாய் கார்கள் இன்ஜின் கோளாறு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த குறைபாட்டால் வாகனம் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் ரக கார்களின் 02 மாடல்களுக்கு சொந்தமான கார்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Veloster (FS) மற்றும் Tucson (TL) (மாறுபாடுகள்: FS 1.6GDI, TL 2.0MI) (2014 – 2017) பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் எவரும் இலவச நிபந்தனை […]

கருத்து & பகுப்பாய்வு

பிரித்தானியாவின் சிறந்த வங்கிகள்…!

  • July 9, 2023
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள சில சிறந்த வங்கிகள் நாட்வெஸ்ட், எச்எஸ்பிசி மற்றும் லாயிட்ஸ் வங்கி. ஐக்கிய இராச்சியம் ஐரோப்பாவிலேயே மிக விரிவான வங்கித் துறையைக் கொண்டுள்ளது. நாம் சொல்லக்கூடிய அளவிற்கு, இது உலக அளவில் நான்காவது இடத்தில் உள்ளது. யுனைடெட் கிங்டமில் வங்கித் தொழில் மிகவும் மேம்பட்டது, நவீன தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளால் புதிய துணைத் துறைகள் உந்தப்படுகின்றன. சர்வதேச கடன்களைப் பொறுத்தவரை, இது உலகின் மிக முக்கியமான நிதி மையமாகவும் உள்ளது. இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ நாணயம் பிரிட்டிஷ் […]

ஆசியா

அணுவாலையின் கழிவு நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு தென்கொரிய மக்கள் எதிர்ப்பு!

  • July 9, 2023
  • 0 Comments

ஃபுகுஷிமா ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்றும் ஜப்பானின் திட்டத்திற்கு தென் கொரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறித்த திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தி ஏராளமான மக்கள் தென் கொரியாவின் தலைநகரில் ஒன்றுக்கூடி பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தலைநகர் சியோலில் ஒன்று திரண்ட மக்கள் புகுஷிமாவின் அணுக்கழிவு நீரை கடலில் அகற்றுவதை நாங்கள் கண்டிக்கிறோம்!”எனக் குறிப்பிட்டு பேரணி நடித்தியுள்ளனர். சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் கடலில் கலக்கப்படுவதால் பாதிப்பு ஏற்படாது என ஜப்பான் கூறியுள்ளது. இது குறித்து பல கட்ட ஆய்வுகள் […]

வாழ்வியல்

தொப்பையை இலகுவாக குறைக்க தூங்கினால் போதும்!

  • July 9, 2023
  • 0 Comments

மனிதர்களின் அன்றாட வாழ்வில் தூக்கம் இன்றியமையாதது.‌ நீங்கள் முறையான அளவு தூக்கத்தை தினசரி மேற்கொண்டால்தான் உங்கள் அன்றாட வேலைகள் எந்த வித தடையுமின்றி ஆரோக்கியமாக நடைபெறும். உங்களது உறுப்புகளும் எனெர்ஜியோடு நலமாக செயல்படும். ஏழு மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவருக்கு முறையான தூக்கம் கிடைப்பதில்லை. இதை குறைந்த தூக்கம் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர். இது உங்களின் உடல் எடை குறைப்பு ப்ராசஷை பாதிக்கலாம். எனவே பின்வரும் ஆறு தூக்க வழிமுறைகளை பின்பற்றினால் உங்களின் எடையை நீங்கள் எதிர்பார்த்தபடி […]

இலங்கை

கொழும்பு 07 இல் பதற்றம்!

  • July 9, 2023
  • 0 Comments

கொழும்பு 07 இல் அமைந்துள்ள வீடொன்று தொடர்பில் இருக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பதற்றத்தை கட்டுப்படுத்தி 26 பேரை கைது செய்துள்ளதுடன், சந்தேக நபர்களை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். இவ்விரு குகுழுக்களும் பல சந்தர்ப்பங்களில் வீட்டின் உரிமைக்காக மோதிக்கொண்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.  இருப்பினும் குறித்த வீடு இருவருக்கும் சொந்தமானது அல்ல என பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை!

  • July 9, 2023
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சியை வருடத்தின் இரண்டாம் பாதியில் காணலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். “முந்தைய சூழ்நிலை மற்றும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொள்ளும் போது, தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு […]