உலகம்

பிரேசில்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பலி

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப்பின் புறநகரில் உள்ள ஜங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை சரிவு ஏற்பட்டது. பல குடியிருப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, இப்பகுதியில் பெய்த கனமழையின் போது அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை, அதிகாரிகள் ஏற்கனவே எட்டு இறப்புகளை அறிவித்தனர். தற்போது அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர் […]

பொழுதுபோக்கு

தப்பான கேள்வி… நான் அப்படி இல்லை.. கொந்தளித்த வனிதா

  • July 9, 2023
  • 0 Comments

தேவையில்லாத கேள்வியை என்னிடம் கேட்காதீங்க என்று நடிகை வனிதா விஜயகுமார் செய்தியாளரிடம் கொந்தளித்தார். வசந்த பாலன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி உள்ள திரைப்படம் அநீதி. அர்பன் பாய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமிழில் அநீதி என்றும், தெலுங்கில் இப்படதிற்கு பிளட் அண்டு சாக்லேட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஜூலை 21 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அநீதி படத்தின் இசை மற்றும் […]

இந்தியா

மேற்கு வங்கத்தில் உள்ளூராச்சி தேர்தல் வன்முறை! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேற்கு வங்கத்தில் உள்ளூராச்சி தேர்தல் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது தெற்கு 24 பர்கானாஸில் ஒரு நபர் இறந்து கிடந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர், ஜூலை 9 அன்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொண்டர் களுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்துவருகிறது. ஜூலை 8ஆம் […]

இலங்கை

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் செய்த நெகிழ்ச்சியான செயல்!

பிக் பாஸ் தமிழ் 6 டைட்டில் வின்னர் அசீம் பரிசுத் தொகையுடன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரபல தொலைக்காட்சி நடிகர் அசீம் கடந்த ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் சீசன் 6’ டைட்டிலை வென்றார். இருப்பினும், பிரபலங்கள் உட்பட பெரும்பாலான பார்வையாளர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்த விக்ரமன் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கருதியதால் சர்ச்சைகள் எழுந்தன. அசீம், கமல்ஹாசனால் முடிசூட்டப்பட்ட பிறகு, கோவிட் 19′ தொற்றுநோயால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 50 லட்ச […]

புகைப்பட தொகுப்பு

ஒலி எழுப்பியவாறு 100KM அசுர வேகத்தில் வந்த “யாழ்தேவி”

  • July 9, 2023
  • 0 Comments

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு பயணத்திருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக அபிவிருத்தி செயற்திட்டத்தில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும் , வவுனியா ஓமந்தை வரையான 13 […]

இலங்கை

மலையகம் 200 நிகழ்வும் நூல் வெளியீடும்

வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (09) வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தியாவில இருந்து மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இரா.சுப்பிரமணியத்தின் மலையக மக்கள் 200 ஆண்டு வரலாறு என்ற நூலும் வெளியிடப்பட்டது. முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.பி. நடராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தமிழ் […]

இலங்கை

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 15பேர் கைது

  • July 9, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீண்பிடியில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு படகுகளில் வந்த மீனவர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களும் அவர்கள் பயணித்த இரு படகுகளும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை […]

இலங்கை

2023 இல் இதுவரை 150,000 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றம்

இந்த வருடத்தில் இதுவரை 150,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா கூறுகையில், இந்தக் குழுவில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்த்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் 300,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். SLBFE இல் உள்ள புள்ளிவிபரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் பதிவுசெய்யப்பட்ட இலங்கையர்களை மட்டுமே கொண்டிருப்பதாக […]

வட அமெரிக்கா

கனடா – இந்திய தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்

  • July 9, 2023
  • 0 Comments

பிரித்தானியாவை தொடர்ந்து கனடாவிலும் இந்திய தேசிய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதிப்பு செய்துள்ளனர். பஞ்சாப்பை தலைமையிடமாக கொண்டு தங்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சீக்கியர்கள் இந்தியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.ஆனால் இந்த கிளர்ச்சி இந்தியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீக்கியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்த கிளர்ச்சிக்கு பிறகு பெரும்பாலான சீக்கியர்கள் அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரித்தானியா போன்ற வெவ்வேறு நாடுகள் குடியேறினர்.இருப்பினும் காலிஸ்தான் இயக்கங்களை சேர்ந்த சில தலைவர்கள் சமீபத்தில் […]

புகைப்பட தொகுப்பு

பிளாஸ்டிக்கால் விலங்குகளுக்கு பாதிப்பு; வவுனியாவில் விழிப்புணர்வு பேரணி

  • July 9, 2023
  • 0 Comments

இந்து பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்றைய தினம் பேரணி ஒன்று  இடம்பெற்றுள்ளது. இந்து பௌத்த சங்கத்தினரின் ஏற்பாட்டில் பொலித்தீன் பாவனையை தடைசெய்வோம் எனும் தொனிப்பொருளில் குறித்த நடைபவனி பேரணியானது நடைபெற்றுள்ளது. பொலித்தீன் பாவனையால் ஏற்படும் தீமைகள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் போன்றவற்றை மக்களுக்கு தெளிவூட்டும் விதமாக நடைபவனி முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு நகர் வழியாக சென்று வவுனியா பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது. இதன்போது வீதியிலிருந்த பொலித்தீன் உள்ளடங்கிய […]