இலங்கையை உலுக்கிய கோர விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் ஒருவர் அதிகாலை உயிரிழந்த நிலையில் இந்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையிலும், ஒருவரது சடலம் மனம்பிடிய வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, விபத்தில் காயமடைந்த நிலையில் 40க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் […]