தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்!
ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக் கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் ஈழத் தமிழ் மக்களின் […]