இலங்கை செய்தி

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

  • April 30, 2023
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் […]

ஆசியா செய்தி

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வாக்கெடுப்பு நடத்தும் உஸ்பெகிஸ்தான்

  • April 30, 2023
  • 0 Comments

உஸ்பெகிஸ்தானில் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் தனது ஆட்சியை 14 ஆண்டுகள் நீட்டிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பு வாக்கெடுப்பில் மக்கள் வாக்களிக்கின்றனர். வாக்கெடுப்பு நிறைவேறினால், ஜனாதிபதி பதவிக்காலம் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளாக நீட்டிக்கப்படும். இந்த மாற்றம் 65 வயதான மிர்சியோயேவ் மேலும் இரண்டு பதவிகளை வகிக்க அனுமதிக்கும் மற்றும் 2040 வரை அவரது அதிகாரத்தை நீட்டிக்கும். மத்திய ஆசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட முன்னாள் சோவியத் குடியரசின் அதிகாரிகள், அரசியலமைப்பின் மறுசீரமைப்பு 35 மில்லியன் மக்கள் பெரும்பான்மையான முஸ்லிம் நாட்டில் […]

இந்தியா விளையாட்டு

கடைசி பந்தில் பஞ்சாப் அணி வெற்றி

  • April 30, 2023
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய துவக்க வீரர் தேவன் கான்வே 52 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 92 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

மஹிந்தவை பிரதமராக நியமிக்க திட்டம்?

  • April 30, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதன் மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான யோசனையை முன்வைக்கவுள்ளது. ராஜபக்ஷர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்காகவே இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், மே தினக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. மே தினத்தை அடிப்படையாகக் கொண்டு பழைய தலைவர்களை மீண்டும் பதவிகளில் அமர்த்துவதற்கு […]

இலங்கை

சுயநலவாத அரசியல் வாதிகளின் பின்னால் ஓடமுடியாது – பந்துல குணவர்த்தன!

  • April 30, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் கட்சியினர் நாட்டைப் பிளவுபடுத்துவதிலேயே  குறியாகவுள்ளதாகவும் அவர்களின் ஆட்டத்துக்கு ஆட முடியாதெனவும்  அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை உசுப்பேத்தி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாட தொழிலாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனூடாக அவர்கள் தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார். ஹர்த்தால் போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்த அமைச்சர்,  தமிழ் மக்களை ஏமாற்றவே இப்படியான போராட்டங்களைத் தமிழ்க் கட்சியினர் நடத்துகின்றனர் என்றும் […]

ஆசியா செய்தி மத்திய கிழக்கு

பதற்றம் நீடிக்கும் நிலையில், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா!

  • April 30, 2023
  • 0 Comments

கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில், மெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தமானது அந்த இரு நாடுகளுக்கும் தீவிர ஆபத்தை ஏற்படுத்தும் என கிம் ஜொங் உன் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்பு கருதி அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 26-ந் […]

ஐரோப்பா

லண்டன் பொதுவெளியில் பிரபல நடிகரின் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!

  • April 30, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் லண்டன் நகரில் பிரபல ஹாலிவுட் நடிகர் சிலியின் மர்பி, பொதுவெளியில் சிறுநீர் கழித்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான சிலியின் மர்பி (46) பிரித்தானியாவில் தனது நண்பர்களுடன் மதுவிருந்தில் கலந்து கொண்டு, அவரக்ளுடன் பேசி மகிழ்ந்தார். பப்பில் தன்னை சந்தித்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் கொடுத்த அவர், பிரெஞ்சு ஹவுசில் ஷாம்பெயின் மதுவை அருந்த தொடங்கினார். சிலியின் மர்பி சுமார் ஐந்து மணிநேரம் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மத்திய லண்டன் […]

ஆசியா உலகம் செய்தி

தென்சீனக் கடல்பரப்பில் பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

  • April 30, 2023
  • 0 Comments

தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையே தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அங்கு பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும் ரோந்து சென்றது. அப்போது 2 […]

மத்திய கிழக்கு

சூடான் போர்: பலியான மக்களின் எண்ணிக்கை வெளியானது

  • April 30, 2023
  • 0 Comments

சூடான் தலைநகர் கார்டூமின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. சூடானின் இரண்டு உயர்மட்ட தளபதிகளுக்கு இடையே போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், ஆட்சி அதிகாரத்திற்கான இந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாட்டைவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கியதால், பொதுமக்களின் இறப்பு […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க திட்டம்!

  • April 30, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா,  சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் […]

You cannot copy content of this page

Skip to content