பொழுதுபோக்கு

சமந்தா வெளியிட்ட உருக்கனமான பதிவு! அப்படி என்ன சொல்லி இருக்கிறார்?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா, அவர் பயங்கரமான மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. 36 வயதான அவர் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் மேம்பட்ட சிகிச்சையை மேற்கொள்வதற்காக நடிப்பில் இருந்து ஆறு மாதங்கள் ஓய்வு எடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்கும் புதிய பன்மொழி திரைப்படமான ‘குஷி’யில் சமந்தா தனது பகுதிகளை முடித்தார். அவர் Insta இல் ஒரு உணர்ச்சிக் குறிப்பைப் பதிவிட்டுள்ளார். , “இது […]

இந்தியா

தக்காளியை பாதுகாக்கும் பவுன்சர்கள்… வியாபாரியை கைது செய்த பொலிஸார்!(வீடியோ)

  • July 11, 2023
  • 0 Comments

இந்தியாவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் காய்கறிக்கடை வியாபாரி ஒருவர் தக்காளியை பாதுகாப்பதற்காக பவுன்சர்களை நியமித்திருந்தார்.உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள காய்கறி விற்பனையாளரான அஜய் யாதவ் என்பவர், கடையில் இரண்டு பவுன்சர்களை நிறுத்தினார். இதுகுறித்து அவர் கூறும் போது,”தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், எங்கள் கடைக்கு வருபவர்கள் தக்காளி விலையில் […]

இலங்கை

கட்டுநாயக்கவில் தங்க பஸ்மங்களுடன் ஐவர் கைது!

  • July 11, 2023
  • 0 Comments

சுங்கத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் 16 கோடியே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் மற்றும் தங்க பஸ்மம் ஆகியவற்றை, இந்தியா, சென்னைக்கு கடத்திச் செல்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் ஐவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அண்மையில் தன்னுடைய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான வர்த்தகர்கள் நால்வர் மற்றும் 55 வயதான வர்த்தகர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சென்னை […]

இலங்கை

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான அதிர்ச்சி தகவல்!

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம், 22 காரட் சவரன் உள்ளூர் தங்க சந்தையில் ரூ 155,000.ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ. 169,550.ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் டாலரின் விலை உயர்வு மற்றும் தங்கம் விலை உயர்வு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

பட்டப்பகலில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட புதினின் கடற்படை தளபதி !

  • July 11, 2023
  • 0 Comments

உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதி ஒருவர், பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் மீது பயங்கர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியவர் என கருதப்படும் புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவர், பட்டப்பகலில், ஜாகிங் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவிலுள்ள Krasnodar என்ற நகரில், அவர் ஜாகிங் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டார், நெஞ்சிலும் முதுகிலும் நான்கு முறை சுடப்பட்ட அவர் சம்பவ […]

வட அமெரிக்கா

பார்வையற்ற கனடியஇளைஞரின் சாதனை முயற்சி ..!

  • July 11, 2023
  • 0 Comments

கனடாவில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் 30 கிலோமீட்டர் அகலமான நீரிணை ஒன்றை நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார். பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்கொட் ரீஸ் என்ற இளைஞரே இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.சில மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டு அவர் இந்த சாதனையை நிலைநாட்டும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றார்.மிகவும் குளிர்ந்த அலைகளைக் கொண்ட குறித்த நீரிணையில் அவர் நீந்தி கடக்க உள்ளார். பிறக்கும் போது ஏற்பட்ட போர் ஓர் குறைபாடு காரணமாக சுமார் 20 வயதளவில் […]

பொழுதுபோக்கு

ரவீந்தருக்கு ஆறு அடி பரிசுடன் சேர்ந்து வந்த ஆப்பு! சிக்கினான் சிவனாண்டி

  • July 11, 2023
  • 0 Comments

பிரபல சீரியல் நடிகையாக இருக்கும் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தனது கணவருக்கு பிறந்த நாளை முன்னிட்டு ஆறு அடி சிறப்பு பரிசையும் கொடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஆச்சரியப்படுத்தினார். ரவீந்தர் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு நூதன முறையில் செய்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரவீந்தர், கிளப் ஹவுஸ் என்ற செயலி மூலம் அமெரிக்க வாழ் இந்தியரான விஜய் […]

இந்தியா

மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் முடிவுகள்! திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட (உள்ளுராட்ச்சி) பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற அமைப்பு தேர்தல்களின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. 19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது. மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் 73,887 இடங்களில் 2.06 லட்சம் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர். பஞ்சாயத்து தேர்தல் முடிவுகலின் படி திரிணாமுல் காங்கிரஸ் 14,000 […]

ஆசியா

நேபாளம் ஹெலிகொப்டர் விபத்து ; ஐவர் பலி, ஒருவர் மாயம்

  • July 11, 2023
  • 0 Comments

நேபாள நாட்டில் 06 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் மாயமாகியது. சொலுகும்புவில் இருந்து காத்மாண்டுவிற்கு சென்ற ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து ஹெலிகொப்டரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் நாடான நேபாளத்தில் விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது. ஹெலிகொப்டரை தேடும் பணி நடைபெற்ற நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 5 பேருடம் பலியாகினர் ஒருவர் மாயமாகியுள்ள […]

இலங்கை

வவுனியாவில் காட்டு யானைக்கு வெடி வீசியவருக்கு நேர்ந்த விபரீதம்!

வவுனியா கள்ளிக்குளம் – சிதம்பரம் கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம்  புகுந்த காட்டு யானைக்கூட்டம் தென்னை வாழை போன்ற பயிர் நிலங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனை தடுப்பதற்கு யானை வெடி வீசிய குடும்பத்தலைவர் கையில் வெடி வெடித்து இரண்டு விரல்கள் அகற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தமது குடியிருப்பு மற்றும் பயிர் நிலங்களில் காட்டு யானையின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. அதைதடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.