கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் தவறான செய்தியை வெளியிட்ட இரு சிங்கள ஊடகங்கள்
இலங்கையின் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியானது, “தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சித்திரதை முகாம்” என, இலங்கையின் இரண்டு சிங்கள ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தினமின பத்திரிகை மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான தனியார் பத்திரிகையான திவயின ஆகிய இரு பத்திரிகைகளும் இந்த தவறான செய்தியை வெளியிட்டுள்ளனகுறித்த இரு பத்திரிகைகளிலும் ஒரே செய்தி இரு வேறு ஊடகவியலாளர்களின் பெயர்களில் வெளியாகியுள்ளது. “புலிகளின் சித்திரவதை முகாமில் […]