இலங்கை

மூதூர் – பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 37வது நினைவஞ்சலி நிகழ்வு

  • July 16, 2023
  • 0 Comments

திருகோணமலை- மூதூர் – பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 37வது நினைவஞ்சலி நிகழ்வு மணற்சேனை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (16) காலை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மூதூர் பிரதேசசபை முன்னாள் உப தவிசாளர் சி.துரைநாயகம், முன்னாள் கிராம உத்தியோகத்தர் தேவகடாட்சம் உட்பட பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் […]

ஆசியா

சர்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

  • July 16, 2023
  • 0 Comments

சர்ச்சைக்குரிய செஃப்ட்ரியாக்ஸோன்  மருந்தை செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட உபாதை காரணமாக பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே கண்டி மருத்துவ அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பெண் கடந்த 13ஆம் திகதி கண்டி பொது வைத்தியசாலையின் 31ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  குறித்த மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உபாதைகள் ஏற்பட்ட நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு […]

வட அமெரிக்கா

17 வயது மாணவருடன் தாகாத உறவு… ஆசிரியருக்கு 58 நாட்கள் சிறை

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஓக்லாவின் வெஸ்ட்வில்லியைச் சேர்ந்தவர் லியா குயின் (44). இவர் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.ஜென்டரி இடைநிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய இவர் மீது பாலியல் குற்றம்சாட்டப்பட்டது. 2010ஆம் ஆண்டில் 17 வயது உயர்நிலைப் பள்ளி மாணவருடன் லியா குயின் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக பாதிக்கப்பட்ட மாணவரே புகார் கூறியிருந்தார்.மேலும், குயினின் முன்னாள் கணவர் மற்றும் மாணவரின் […]

பொழுதுபோக்கு

ரஜினியுடன் விஜய்.. திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் ஒற்றை புகைப்படம்

  • July 16, 2023
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் விஜய் இருக்கும் போட்டோ டிவிட்டரில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது. இதற்காக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வது குறித்து […]

இலங்கை

யாழ் – ஊர்காவற்துறையில் மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர் கைது!

  • July 16, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், மாணவி தாக்கப்பட்டமை குறித்து மனித உரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினாவியபோது, தாம் அதிபரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், நாளை திங்கட்கிழமை […]

இலங்கை

சீனாவின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் இலங்கை வரவுள்ளார்!

  • July 16, 2023
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான  யுவான் ஜியாஜுன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. இவர் சீனாவில் உள்ள சோங்கிங் நகர சபையின் செயலாளராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. யுவான் ஜியாஜூனின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக […]

இந்தியா ஐரோப்பா

பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிற்கு விற்க இந்தியா திட்டம்

  • July 16, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ரஷ்ய இந்திய கூட்டமைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை ரஷ்யாவிக்கு தர இந்தியா ஒப்பு கொண்டால் அது இருநாட்டு ராணுவ பாதுகாப்பு நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் போருக்கு பின்னர் அது குறித்து ஒப்பந்த ம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. பிரம்மோஸ் சூப்பர்சொனிக் ஏவுகணைக்கு சந்தையாக ரஷ்யா கிகழும் என்று பிலம்மோஸ் ஏவுகணை முதன்மை நிர்வாக அதிகாரியும் MDயுமான அதுல் தினகர் ரானே […]

இலங்கை

நாட்டை அழிக்க நடத்தப்பட்ட சதி குறித்து அம்பலப்படுத்தினார் சாகார!

  • July 16, 2023
  • 0 Comments

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த எந்தவொரு குழப்பகரமான விடயங்களும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டப்பின் காணாமல்போனது எப்படி என கேள்வி எழுப்பும் வகையில், பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகார காரியவசம் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தெல்தெனிய தொகுதிக் குழுக் கூட்டம் நேற்று (15.07) நடைபெற்றது. இதில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் […]

செய்தி

அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ள நைஜீரியா

  • July 16, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் விவசாயிகள் கடத்தப்படுவதால் அவர்களுக்கான பாதுகாப்பை நைஜீரிய அரசு அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நைஜீரிய அதிபர் போலா டின்பு தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு

ஷாருக்கானுக்காகத்தான்… காசுக்காக இல்லை… மனம் திறந்த மக்கள் செல்வன்

  • July 16, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் சேதுபதி கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மிக குறுகிய காலகட்டத்திலேயே இவர் தனது 50வது படத்தை நெருங்கியுள்ளார். மகாராஜா என்ற இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என தன்னுடைய படங்களின் எல்லைகளை விஜய் சேதுபதி விரிவுப்படுத்திக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி தமிழில் துணை கேரக்டர்களில் நடித்து அதன்மூலம்தான் கதாநாயகன் வாய்ப்பை பெற்றார். தனக்கு கிடைத்த […]