ஆசியா

சீனாவிலும் கடுமையான வெப்பநிலை பதிவாகும்!

  • July 16, 2023
  • 0 Comments

உலகம் முழுவதும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பொதுவான பிரச்சினையாக காலநிலை மாற்றம் மாறியுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல், சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில். சீனாவில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தள்ளனர். இதன்படி சீனாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டாவது அதிக வெப்ப அலை எச்சரிக்கையாகும். நாட்டின் பெரும்பகுதி அடுத்த வாரம் அதிக வெப்பநிலையை எதிர்கொள்ளும் என முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். வடமேற்கு […]

உலகம்

அமெரிக்காவில் 45 நிமிடம் மாத்திரமே பெய்த மழையில் சிக்கி மூவர் பலி!

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒன்பது மாதக் குழந்தையை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 45 நிமிடங்களில் ஆறு அங்குலத்துக்கும் அதிகமான மழை பெய்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று கார்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

  • July 16, 2023
  • 0 Comments

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சகல பாராளுமன்ற கட்சிகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் உதவி செயலாளர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த பிரேரணைக்கு கூட்டு ஆதரவை திரட்டுவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் ஈடுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவித்தார்.

ஐரோப்பா

ஐரோப்பாவிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா?

  • July 16, 2023
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்த நாடுகளில் வரும் வாரங்களில் வெப்பநிலையானது 45C பதிவாகும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே அந்தநாடுகளுக்கு பயணம் செய்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரித்தானியாவின் விமான நிலையங்களில், பயண சேவைகள் தொடர்வதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், காலை 11  மணி முதல் பின்நேரம் 11 மணிவரை வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்கு […]

இலங்கை

யாழில் 13ம் திருத்த சட்டம் தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வு

  • July 16, 2023
  • 0 Comments

யாழில் அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் – இந்தியாவின் வகிபாகமும் குறித்த கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நேற்று சனிக்கிழமை(15) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் […]

ஆசியா

கொடி ஏற்றுவதில் போட்டி ; இந்தியாவுக்கு போட்டியாக 500 அடி உயரத்திற்கு தேசிய கொடி நிறுவவுள்ள பாகிஸ்தான்

  • July 16, 2023
  • 0 Comments

ஆகஸ்ட் 15ம் திகதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பரமானநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கும். இந்தியாவின் சுதந்திர தின விழாவை உலகம் முழுவதும் திரும்பி பார்க்கும் . இந்தநிலையில் பாகிஸ்தான் தற்போது நாட்டில் நிலவும் கடனைப் பொருட்படுத்தாமல், அதன் சுதந்திர தின கொண்டாட்டத்திலும் இந்தியாவுடன் போட்டிப்போட முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ம் திகதி […]

இலங்கை

சென்னையில் இருந்து குவைத் செல்லும் விமானம் புறப்படுவதில் தாமதம்!

  • July 16, 2023
  • 0 Comments

சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால் பயணத்தை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விமானம் இன்று (16.07) அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர். இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு […]

பொழுதுபோக்கு

இரட்டை குழந்தைகளுக்கு தாயான பின் சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்திய நயன்தாரா

  • July 16, 2023
  • 0 Comments

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ள ஜவான் படத்திற்காக பெரும் தொகையை சம்பளமாக வாங்கி உள்ளாராம். தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர் ஆரம்ப காலகட்டத்தில் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார். பின்னர் ஒரு கட்டத்தில் கதையின் நாயகியாக உருவெடுத்த நயன், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து […]

ஆசியா

வடகொரியாவுக்கு பதிலடி ;அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து ஏவுகணை சோதனை

  • July 16, 2023
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அண்மையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டிய வடகொரிய அரசு, தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் வட கொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, […]

இலங்கை

கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!

  • July 16, 2023
  • 0 Comments

கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் பெரிடோனிட்டிஸ் நோயை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தில் துகள்கள் கலந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (15.07) […]