இலங்கை செய்தி

மீன் கடைகள் மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு

  • May 4, 2023
  • 0 Comments

வெசாக்யை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் , மீன் கடைகள் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அனைத்து நகரங்களிலும் உள்ள இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர், மேலும் மதுபானக் கடைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பிரகாரம், ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எவ்வாறு மூடப்பட்டிருந்தன. மேலும், அந்த உத்தரவிற்கு மாறாக […]

தமிழ்நாடு

கோவையில் மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்..!

  • May 4, 2023
  • 0 Comments

கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் குறிச்சி சக்திநகர் பகுதியில் மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டது. அந்த வெள்ளை நாக பாம்பு சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது வீட்டின் முன்பகுதியில் இருந்தது. […]

இலங்கை

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் – பொலிஸார் தகவல்

  • May 4, 2023
  • 0 Comments

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். விகாரைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் AI – எச்சரிக்கும் தொழில்நுட்பத்தின் தலைவர்

  • May 4, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வருந்துகிறேன் என AI தொழில்நுட்பத்தின் கோட்பாதர் என போற்றப்படும் ஜெப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார். இது எதிர்காலத்தில் மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் சாட்பாட்டுகளை மேம்படுத்துவதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன. மைக்ரோசாப்ட் உருவாக்கிய சாட்ஜிபிடி, பிங்க் போன்ற சாட்பாட்களை மிஞ்சும் அளவுக்கு கூகுளும் சாட்பாட்டை உருவாக்கி வருகிறது. இந்த சாட்பாட்கள் மனிதனை போலவே சிந்தித்து […]

செய்தி தமிழ்நாடு

வேளாங்கண்ணி மாதா கோவில் போன்று தனி பாடல்

  • May 4, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற நூறாண்டு பழமையான அமல அன்னை ஆலயத்தின் 63 ஆம் ஆண்டு விழா இன்று தொடங்கி வரும் 5-ம் தேதி வரை நடைபெறும். விழாவின் தொடக்கமாக இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நாகல்கேணி பகுதியில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அமல அன்னை ஆலயத்தின் கொடியானது பூஜிக்கப்பட்டு இன்று கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. வேளாங்கண்ணி அன்னை மாதா கோவில் போன்று அமல அன்னை அலையத்திற்குகென கொடியேற்ற பாடல் ஒன்று உருவாக்கப்பட்டு, முதல்முறையாக […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் மணப்பெண் உயிரிழந்துள்ளார். வீதி விபத்தில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் கரோலினா மாகாணத்தில் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த மணமக்கள் வாகனமும், எதிரே அதிவேகத்தில் வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் புதுமண தம்பதியரின் வாகனம் பல அடி தூரத்திற்கு தூக்கிவீசப்பட்டு சாலையில் உருண்டோடியது. சம்பவ இடத்திலேயே மணமகள் சமந்தா பலியானார். மணமகன் ஆரிக் ஹட்சின்சன் உட்பட அவரது உறவினர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். […]

செய்தி தமிழ்நாடு

ஜெராக்ஸ் எடுக்கும் நேரத்தில் திருட்டு

  • May 4, 2023
  • 0 Comments

கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 24ம் தேதி ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் அரசு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஜெராக்ஸ் கடைக்குள் சென்றுள்ளார். ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்துள்ளது. இருசக்கர வாகனம் நிறுத்தி சென்ற 5 நிமிடத்திற்கு உள்ளாக காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த இவர் தாமாக இருசக்கர வாகனத்தை இத்தனை நாட்களாக […]

செய்தி தமிழ்நாடு

137 ஆண்டு பாரம்பரிய வைகை மேம்பால சுவர் உடைப்பு

  • May 4, 2023
  • 0 Comments

விஐபி வாகனங்களை நிறுத்த 137 ஆண்டு பாரம்பரியமிக்க வைகை ஏவி மேம்பாலச்சுவர் உடைப்பு,கொந்தளிக்கும் மதுரை மக்கள். சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தரும் நிகழ்ச்சியை பார்க்க வரும் விஐபிகளுக்காக 137 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஏவி மேம்பாலத்தின் சுவரை உடைத்து தனிப்பாதை அமைத்துள்ளதோடு, வைகை ஆற்றின் உள்ளேயே அவர்கள் வாகனங்களை நிறுத்தவதற்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது,சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை சித்திரைத்திருவிழா தொடங்கி விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கல்யாணம்,இன்று தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பாக நடந்தது. […]

woman sitting thoughtfully அறிந்திருக்க வேண்டியவை

தனிமையை சமாளிப்பது எப்படி?

  • May 4, 2023
  • 0 Comments

உங்கள் காதல் வாழ்க்கை தோல்வியடையும்போது, அதற்காக உங்கள் மனதைப் பாதிப்படைய விடாதீர்கள். அமைதியாக கடந்து செல்லுங்கள். நீங்கள், உறவுகளுடன் நீண்ட காலம் உறவில் இருக்கும்போது, தனிமையில் இருப்பது என்றால் என்ன? என்ற உணர்வை மறந்துவிடுவது எளிதானது. ஒரு ஜோடியாக நீங்கள் பலகாலம் இருந்தால், ஒன்றாகவே எதையும் செய்யப்பழகிவிட்ட உங்களுக்கு, திடீரென்று பிரிவை சந்திக்கும்போது, கை ஒடிந்து போனது போல் உணர்வீர்கள். இருப்பினும், அதை போக்குவதற்கான உத்திகளை கொண்டு, இந்த தனிமையின் வாட்டத்தை போக்கி, மீண்டும் வசந்தத்தை அடைய […]

ஐரோப்பா

பிரான்ஸில் அதிர்ச்சி – மூதாட்டி ஒருவரை கடித்துக்குதறிய பொலிஸாரின் நாய்

  • May 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பொலிஸாரின் மோப்ப நாய் ஒன்று மூதாட்டி ஒருவரை தவறுதலாக கடித்துக்குதறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் Caluire-et-Cuire (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குறித்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையர்கள் வந்து சென்றதுக்குரிய அடையாளங்கள் இருந்ததால், வீட்டுக்குள் பொலிஸார் மோப்ப நாயுடன் நுழைந்தனர். வீட்டுக்குள் தாம் நுழைந்துள்ளதாக அறிவித்தல் விடுத்தும், யாரும் பதிலளிக்காததால் மோப்ப நாயின் […]

You cannot copy content of this page

Skip to content