வட அமெரிக்கா

பாலியல் தொல்லை கொடுத்த நபர்..கொன்று நிர்வாணமாக சாலையில் தொங்கவிட்ட சம்பவம்!

  • May 4, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் உடல், ஆணுறுப்பு வெட்டி வாயில் வைக்கப்பட்ட நிலையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரின் உடல், சாலையில் குறுக்கே இருக்கும் இரும்பு அமைப்பில் நிர்வாணமாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.அத்துடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவரது ஆண்குறி வெட்டி எடுக்கப்பட்டு அவர் உடலின் வாயிலேயே திணித்து வைக்கப்பட்டுள்ளது. சிஹுவாஹுவாவில் உள்ள காசாஸ் கிராண்டேஸில் இந்த […]

இலங்கை செய்தி

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

  • May 4, 2023
  • 0 Comments

  மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

2 ஆண்டுகள் குளிர்சாதனபெட்டியில் முதியவரின் உடலை ஒளித்து வைத்த நபர்; அதிர்ச்சியளிக்கும் காரணம்!

  • May 4, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இறந்த முதியவரின் உடலை 2 ஆண்டுகள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்த நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 71 வயதான ஜான் வைன்ரைட்(71) என்பவர், கடந்த செப்டம்பர் 2018ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.ஆனால் அவரது உடல் கடந்த 2020ஆம் ஆண்டில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுவரை முதியவரின் உடல் அவரது வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்டுள்ளது. டாமியோன் ஜான்சன் என்பவர் தான் இக்கொடூர செயலை செய்திருக்கிறார். […]

உலகம் செய்தி

உக்ரைனில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 21 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

  உக்ரைனின் கெசான் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுடன்இ கேசன் நகரில் ஒரு ரயில் நிலையம், ஒரு வீடு, ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் பிற சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கெசான் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  • May 4, 2023
  • 0 Comments

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பிறந்த திரு. அஜய் பங்காவுக்கு 63 வயது. தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.

அரசியல் இலங்கை

மீண்டும் பிரதமர் பதவி; மஹிந்த ராஜபக்சவுக்கு நாட்குறித்த ஆஸ்தான ஜோதிடர்!

  • May 4, 2023
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்க எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது எனவரின் ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,என்னதான் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டாலும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கையை மஹிந்த ராஜபக்ச இன்னும் கைவிடவில்லை. பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் அவரது ஆஸ்தான ஜோதிடரிடம் அண்மையில் ஆலோசனை கேட்டுள்ளார் மஹிந்த. “எதிர்வரும் மே 7 ஆம் திகதியே பொருத்தமானது. அன்றைய தினமே […]

இலங்கை செய்தி

மீன் கடைகள் மற்றும் மதுபான கடைகளுக்கு பூட்டு

  • May 4, 2023
  • 0 Comments

வெசாக்யை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் , மீன் கடைகள் இன்று (04) முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அனைத்து நகரங்களிலும் உள்ள இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களுக்கு உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர், மேலும் மதுபானக் கடைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் பிரகாரம், ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எவ்வாறு மூடப்பட்டிருந்தன. மேலும், அந்த உத்தரவிற்கு மாறாக […]

தமிழ்நாடு

கோவையில் மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்..!

  • May 4, 2023
  • 0 Comments

கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் குறிச்சி சக்திநகர் பகுதியில் மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டது. அந்த வெள்ளை நாக பாம்பு சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது வீட்டின் முன்பகுதியில் இருந்தது. […]

இலங்கை

இலங்கை முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் – பொலிஸார் தகவல்

  • May 4, 2023
  • 0 Comments

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார். விகாரைகள், வெசாக் வலயங்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் AI – எச்சரிக்கும் தொழில்நுட்பத்தின் தலைவர்

  • May 4, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கியதற்காக வருந்துகிறேன் என AI தொழில்நுட்பத்தின் கோட்பாதர் என போற்றப்படும் ஜெப்ரி ஹின்டன் எச்சரித்துள்ளார். இது எதிர்காலத்தில் மனித மூளையை மிஞ்சி அதிசக்தியுடன் மிகுந்த ஆபத்துகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் சாட்பாட்டுகளை மேம்படுத்துவதில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டு செயல்படுகின்றன. மைக்ரோசாப்ட் உருவாக்கிய சாட்ஜிபிடி, பிங்க் போன்ற சாட்பாட்களை மிஞ்சும் அளவுக்கு கூகுளும் சாட்பாட்டை உருவாக்கி வருகிறது. இந்த சாட்பாட்கள் மனிதனை போலவே சிந்தித்து […]

You cannot copy content of this page

Skip to content