நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு! கலால் திணைக்களம் வெளியிட்ட தகவல்
இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 20,121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 2,687 பெண்களும் உள்ளடங்குவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 57 கலால் நிலையங்கள் மற்றும் 5 கலால் விஷேட நடவடிக்கை பிரிவுகள் மற்றும் கலால் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் மூலம் குறித்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.