இலங்கை

பால்மாவின் விலையில் மாற்றம்!

  • July 20, 2023
  • 0 Comments

லங்கா சத்தோச நிறுவனம் பால்மாவின் விலையை குறைத்துள்ளது. இதன்படி நாளை (21.07) முதல் அமலுக்கு வரும் வகையில் 400 கிராம் பால்மாவின் விலையை 31ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளது. புதிய விலை 999 ரூபாவாகும்.

இலங்கை

கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம்! கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கு மாகாண பாதுகாப்பு சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று(19) நடைபெற்றது இக்கூட்டத்தில்,சட்டம் ஒழுங்கு, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகம், சட்டவிரோத மீன்பிடித்தல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடு, மனித கடத்தல், மான் பூங்காக்கள் மீதான கண்காணிப்பு, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடபட்டது. இக்கூட்டத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாண இராணுவத் […]

இலங்கை

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தரால் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

  • July 20, 2023
  • 0 Comments

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா பொலிஸ் நிலையத்தில் மாவட்ட சமூக பொலிஸ் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் நபர், குறித்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றி வருகின்றார். குறித்த நபர் வவுனியா நகரையண்டிய பாடசாலையில் கல்வி கற்கும் குருமன்காடு பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவனை […]

உலகம்

பால்கனில் சீரற்ற காலநிலை காரணமாக 06 பேர் உயிரிழப்பு!

  • July 20, 2023
  • 0 Comments

பால்கனில் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்ற நிலையில். பால்கனில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (20.07) காலை வீசிய சூறாவளி காற்று காரணமாக தீ வேகமாக பரவிய நிலையில், அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சிறிய நகரமான Tovarnik இல் உள்ள அதிகாரிகள், தீயணைப்பு வீரர் “துரதிர்ஷ்டவசமாக” இறந்துவிட்டார் என்று கூறினார், ஆனால் வேறு […]

மத்திய கிழக்கு

கென்யாவில் வரியேற்றத்தை கண்டித்து போராட்டம்..!

  • July 20, 2023
  • 0 Comments

கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தை கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்து. போராட்டத்திற்குங எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்ததையடுத்து, பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன சில இடங்களில் சாலைகளின் குறுக்கே போராட்டக்கார்ர்கள் டயர்களை போட்டு தீயிட்டு கொளுத்தியதால் போக்குவரத்து தடைப்பட்டது. இதனிடையே பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போராட்டக்கார்ர்கள் சிதறி ஓடினர்.

ஆசியா ஐரோப்பா

ஈராக்- ஸ்வீடன் தூதரகத்திற்கு தீயிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்

  • July 20, 2023
  • 0 Comments

ஈராக்கின் பக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முற்றுகையிட்டு தீ வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அதிகாரிகள் பாதுகாப்பாக உள்ளனர். சமீபத்தில் ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டது, வரும் வாரங்களில் இதுபோன்ற ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு எதிராக ஈராக்கில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாட்டின் சக்திவாய்ந்த […]

இலங்கை

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பதிவான நெகிழ்ச்சியான தருணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவருக்கு ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. […]

இலங்கை

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி புறப்பட்ட ரயில்… மாட்டுடன் மோதி விபத்து

  • July 20, 2023
  • 0 Comments

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (19) மாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது. இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் […]

இலங்கை

சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

  • July 20, 2023
  • 0 Comments

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 15 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைசேரிக்கு 15 பில்லியன் ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என பீரிஸ் தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முதித பீரிஸ் ‘எமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று திறைசேரிக்கு 150 கோடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சிலிண்டரில் 1.5 […]

இந்தியா

சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று காந்தியின் உடல்நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் கடந்த 18ம் திகதி இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோனியா காந்தி ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து காணப்பட்டுள்ளார். அதன் தலைப்பில் கருணை வடிவம் அழுத்தமாக உள்ளது அம்மா என்று […]