இலங்கை செய்தி

கொழும்புக்கு நீர் வெட்டு

  • May 6, 2023
  • 0 Comments

பராமரிப்பு பணிகள் காரணமாக 2023 மே 08 திங்கட்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எந்திரகோட்டே, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் சகல பக்க வீதிகளிலும் மே 8 ஆம் […]

உலகம் செய்தி

மூன்றாம் சார்லஸ் பிரிட்டனில் புதிய மன்னராக முடிசூடினார்

  • May 6, 2023
  • 0 Comments

மூன்றாம் சார்லஸ் மன்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2000 விருந்தினர்களின் பங்கேற்புடன். ராணி கமிலாவுடன் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸும் இங்கு முடிசூட்டப்பட்டது . முடிசூட்டு விழா நடந்த பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் சிறப்பு அரச ஊர்வலத்தில் வரவேற்கப்பட்டனர் . அரச அணிவகுப்பில் வருவதற்கு ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய ராணியின் வைர விழா வண்டியை […]

இலங்கை உலகம் விளையாட்டு

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருணா ஜப்பானில் வெற்றி

  • May 6, 2023
  • 0 Comments

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் அருண தர்ஷன் தனது தனிப்பட்ட சிறந்த நேரத்தை பதிவு செய்துள்ளார். மிச்சிடகா மெமோரியல் சர்வதேச தடகளப் போட்டி ஜப்பானில் நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நுழைந்த இலங்கையின் அருண தர்ஷனா 45.4.9 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தார். இந்த நிகழ்வில் இது அவரது சிறந்த நேரமாகும் சுகத் திலகரத்ன, ரொஹான் பிரதீப் குமார், பிரசன்ன அமரசேகர ஆகியோருக்குப் பிறகு ஆடவர் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் […]

இலங்கை

சீரற்ற காலநிலையால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

  • May 6, 2023
  • 0 Comments

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் 11 மாவட்டங்களில் 9000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சமீபத்திய நிலை அறிக்கை தெரிவிக்கிறது. கொழும்பு, கம்பஹ, களுத்துறை,  இரத்தினபுரி,  கேகாலை,  குருநாகல்,  புத்தளம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,  திருகோணமலை,  பதுளையில் மழை மற்றும் பலத்த காற்றினால் 2249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் வெள்ளத்தினால் 2000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  71 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக […]

இலங்கை செய்தி

வெசாக் அன்று கடலுக்குச் சென்ற குட்டி ஆமைகள்

  • May 6, 2023
  • 0 Comments

பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் முயற்சியின் கீழ் சுமார் 150 ஆமை குட்டிகள் வெசாக் அன்று இரவு பாணந்துறை கடற்கரையில் கடலில் விடப்பட்டன. இதற்காக பாணந்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பிரசன்னமாகியிருந்தது .

இலங்கை செய்தி

மருத்துவமனையில் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருட்டு

  • May 6, 2023
  • 0 Comments

நீண்ட காலமாக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர்இ இன்று (06) காலை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான திருட்டு 2020 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுள்ளதாகவும் இவர்கள் திருடிய […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த அறிக்கை விரைவில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்!

  • May 6, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அது குறித்த நிலைப்பாடு விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் துணை செயலாளர் நாயகம் அருட்தந்தை டோனி மார்டின்  தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முழுமையான விசாரணை அறிக்கை   கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  குறித்த அறிக்கை இருவட்டுக்களாகவே கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை […]

இலங்கை செய்தி

போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர் கைது

  • May 6, 2023
  • 0 Comments

வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட நபரை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அங்கு அவரது பையில் 84 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 37 வயதுடைய சந்தேகநபர் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் ஹைபர் சோனிக் ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • May 6, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் ஹைபர் சோனிக் ஏவுகணையை அமெரிக்கா வழங்கிய பெட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் அதி நவீன ஏவுகணைகளில் ஒன்றை அந்நாடு இடைமறித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இது குறித்து டெலிகிராம் இடுகையில் பதிவிட்டுள்ள விமானப்படை தளபதி, மைகோலா ஓலேஷ்சுக்,   உக்ரைன் தலைநகரில் ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் கின்சல் வகை பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிக்கப்பட்டது என்று கூறினார். Kh-47 ஏவுகணை ரஷ்ய பிரதேசத்தில் இருந்து MiG-31K விமானம் […]

செய்தி தமிழ்நாடு

கோடைகாலம் என்பதால் வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை இல்லை

  • May 6, 2023
  • 0 Comments

சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுடைய பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா. செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால் வழக்கமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் அந்த நாளில் விலங்குகளுக்கான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளும் விடுமுறையின்றி இயங்கும் என வண்டலூர் உயிரியல் பூங்கா சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால் விலங்குகளுக்கும் பார்வையாளர்களுக்கும்  சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You cannot copy content of this page

Skip to content